ROSAPOO CHINNA ROSAPOO-FEMALE

 

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ




Movie: Suryavamsam

Singers:  sujatha 

Music director: S.A.Rajkumar 


ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.. 
உன் பேர சொல்லும் ரோசாப்பூ..

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன்பேர சொல்லும் ரோசாப்பூ..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
உன் பாட்டு மட்டும் துணையாக..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக உன்ன விட்டேன்..
உசுருக்குள் கோயில் கட்டி உன்ன கொலு வச்சு கொண்டாடினேன்..
மழை பேஞ்சா தானே மண்வாசம்..
உன்ன நெனச்சாலே பூவாசம்தான்..
பாத மேல பூத்திருப்பேன்..
கையில் ரேக போல சேர்ந்திருப்பேன்..

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன்பேர சொல்லும் ரோசாப்பூ..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..

கண்ணாடி பாக்கையில அங்க முன்னாடி உன் முகம்தான்..
கண் மூடி தூங்கயில காணும் கனவெல்லாம் உன்னோடதான்..
நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா..
மல மேல் வெளக்கா ஏத்தி வெப்பேன்..
உன்ன படம் போல் மனசில் மாட்டி வெப்பேன்..

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன்பேர சொல்லும் ரோசாப்பூ..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
உன் பாட்டு மட்டும் துணையாக..
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..
உன்பேர சொல்லும் ரோசாப்பூ..
காத்தில் ஆடும் தனியாக..
உன் பாட்டு மட்டும் துணையாக..