CHALAKKU CHALAKKU

 சலக்கு சலக்கு

Movie: Suryavamsam

Singers: Arunmozhi, sujatha 

Music director: S.A.Rajkumar 

ஆண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..
வெளக்கு வெளக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு..
உனக்கு குளிருனா என்ன எடுத்து போத்திக்கோ..
மாமன் தோளுல மச்சம் போல ஒட்டிக்கோ..
அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..
அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கெளப்பு..

பெண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..
வெளக்கு வெளக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு..

ஆண்: அடியே மெட்டி சத்தம் கேக்காம தான்..
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரம்தான்..

பெண்: வரப்பில் உன்ன பாத்த மறு வேள தான்..
இடுப்பில் நிக்காதய்யா என் சேல தான்..

ஆண்: காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவ தான்..
கட்டிலுக்கு கால் வலிச்சா கட்டாந்தர படுக்க தான்..

பெண்: உடம்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஓடுது மச்சான்..
வளச்சு நொறுக்க சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான்..

ஆண்: அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..
அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கெளப்பு..

பெண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..

ஆண்: வெளக்கு வெளக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு..

பெண்: கிழக்கே வெளுக்காம இருந்தாலென்ன..
இரவே முடியாமல் தொடர்ந்தாலென்ன..

ஆண்: குடையே பிடிக்காம நனைஞ்சாலென்ன..
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன..

பெண்: மார்கழியில் பாய் விரிச்சா மாசி வந்தா மசக்க தான்..
ஆத்தங்கர அரசமரம் சுத்த வேண்டாம் ஜாலிதான்..

ஆண்: உனக்குள் விழுந்த பின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன..

பெண்: வெளக்கு அணச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன..

ஆண்: அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..
அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கெளப்பு..

பெண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..

ஆண்: வெளக்கு வெளக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு..

பெண்: எனக்கு குளிருனா உன்ன எடுத்து போர்த்துவேன்..
மாமன் தோளுல மச்சம் போல மாறுவேன்..

ஆண்: அடடா அல்வா துண்டு இடுப்பு உன் இடுப்பு..

பெண்: அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கெளப்பு..

ஆண்: சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு..
வெளக்கு வெளக்கு வெட்கம் வந்தா வெலக்கு வெலக்கு..