NATCHATHIRA JANNALIL

 நட்சத்திர ஜன்னலில்




Movie: Suryavamsam

Singers: Mano, Sunantha 

Music director: S.A.Rajkumar 


பெண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது 
சிறகை விரித்து பறப்போம்..
நம் உறவில் உலகை அளப்போம்..
விளையாடலாம் நிலாவிலே..
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே..
வானை புரட்டி போடு..
புது வாழ்வின் கீதம் பாடு..

ஆண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது 
சிறகை விரித்து பறப்போம்..
நம் உறவில் உலகை அளப்போம்..

ஆண் : சித்திரங்களை பாட சொல்லலாம்..
தென்றலை அஞ்சல் ஒன்று போட சொல்லலாம்..

பெண்: புத்தகங்களில் முத்தெடுக்கலாம்..
பொன்னாடை இமயத்துக்கு போர்த்திவிடலாம்..

ஆண்: பூமிக்கு பொட்டு வைத்து பார்க்கலாம் பார்க்கலாம்..
பூவுக்கும் ஆடை தைத்து போடலாமா..
 
பெண்: சூரிய தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம்..
சொர்க்கத்தின் புகைப்படத்தை காட்டலாமா..

ஆண்: வானம்பாடி வாழ்விலே வருந்தி அழுவதில்லை..
வணங்கி விழுவதில்லை..

பெண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது 

ஆண்: சிறகை விரித்து பறப்போம்..
நம் உறவில் உலகை அளப்போம்..

பெண்: சங்கீத புறா நெஞ்சில் பறக்கும்..
சந்தோஷ முல்லை எங்கள் வீட்டில் முளைக்கும்..

ஆண்: சந்தன மழை நம்மை நனைக்கும்..
பூந்தென்றல் பாதை சொல்ல வந்து அழைக்கும்..

பெண்: சிட்டுக்கு சிறகடிக்க சொல்லி தந்ததாரடி..
மீனுக்கு நீச்சல் கற்று தந்ததாரோ..

ஆண்: மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்..
மின்னலில் கூரை பின்னி போடலாமா..

பெண்: ஓங்கும் உந்தன் கைகளால்..
வானை புரட்டி போடு..
புது வாழ்வின் கீதம் பாடு..

ஆண்: நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது..

பெண்:சிறகை விரித்து பறப்போம்..
நம் உறவில் உலகை அளப்போம்..

ஆண்: விளையாடலாம் நிலாவிலே..
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே..
வானை புரட்டி போடு..
புது வாழ்வின் கீதம் பாடு..

நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குது 
லாலலால லாலா..லாலலால லாலா..