KADHALA KADHALA
காதலா காதலா
Movie: Suryavamsam
Singers: Hariharan, Swarnalatha
Music director: S.A.Rajkumar
காதலா காதலா..காதலின் சாரலா..
தீயிலே தென்றலா வாழ்கிறேன் காதலா..
கண்களா தூண்டிலா..கண்களா தூண்டிலா..
மாறினேன் மீன்களா..
ஆண்: காதலா காதலா..காதலின் சாரலா..
பெண்: இதய துடிப்பினில் ஓசை இல்லை..
எடுத்து சொல்லவும் பாஷையில்லை..
ஆண்: இதற்கு முன் இந்த ஆசையில்லை..
இமைகள் விசிறிகள் வீசவில்லை..
பெண்: தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்..
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்..
ஆண்: கனவினில் உன்னை நான் படம் பிடித்தேன்..
தலையணையோடு நான் அடம்பிடித்தேன்..
பெண்: ஏன் இந்த மாற்றமோ..
ஆண்: காதலா காதலா..காதலின் சாரலா..
ஆண்: பெருகி பெருகி ஒரு அலையானேன்..
உருகி உருகி பனித்துளியானேன்..
பெண்: பறந்து பறந்து ஒரு சிறகானேன்..
நனைந்து நனைந்து புல்வெளியானேன்..
ஆண்: பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன..
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன..
பெண்: மலர்களில் எல்லாம் கண் முளைப்பதென்ன..
ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன..
ஆண்: ஏன் இந்த மாற்றமோ..
காதலா காதலா..காதலின் சாரலா..
பெண்: தீயிலே தென்றலா வாழ்கிறேன் காதலா..
ஆண்: கண்களா தூண்டிலா..கண்களா தூண்டிலா..
பெண்: மாறினேன் மீன்களா..
ஆண்: காதலா காதலா..காதலின் சாரலா..
.........................
Songs lyrics from Suryavamsam movie:
