THENDRALE

 தென்றலே




Movie: Kadhal desam 

Singers: Mano,  Unni krishnan,  Dominique cerejo 

Music director: A.R.Rahman 

ம்ம்..ம்ம்..ம்ம்ம்..
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..
கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு..
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு..

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..

காதல் என்றால் கவலையா..
கண்ணில் நீரின் திவலையா..
நோயானேன் உயிரும் நீயானேன்..
இரவில் காயும் முழு நிலா..
எனக்கு மட்டும் சுடும் நிலா..
வாராயோ எனை நீ சேராயோ..
தூங்க வைக்க நிலவே தூக்கமின்றி நீயே வாடினாயோ..

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..

மாலை வானில் கதிரும் சாயும்..
மடியில் சாய்ந்து தூங்கடா..
பூமி யாவும் தூங்கும்போது..
பூவை நீயும் தூங்கடா..
மலரின் காதல் பனிக்கு தெரியும்..
என் மனதின் காதல் தெரியுமா..
சொல்ல வார்த்தை கோடி தான்..
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்..
தூங்க வைக்க பாடினேன்..
நான் தூக்கமின்றி வாடினேன்..

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..
கரையின் மடியில் நதியும் தூங்கும் கவலை மறந்து தூங்கு..
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு..

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு..
பூவுடன் மெல்ல நீ பேசு..






.........................





Songs lyrics from Kaadhal desam movie: