OH VENNILA

 ஓ வெண்ணிலா




Movie: Kadhal desam 

Singers: Unni krishnan 

Music director: A.R.Rahman 

ஓ வெண்ணிலா இரு வானிலா..நீ..
ஓ நண்பனே அறியாமலா..நான்..
கண்ணே கண்ணே காதல் செய்தாய்..
காதல் என்னும் பூவை நெய்தாய்..
நண்பன் அந்த பூவை கொய்தால்..
ஓ நெஞ்சே நெஞ்சே நீ என் செய்வாய்..
கண்ணே கண்ணே காதல் செய்தாய்..
காதல் என்னும் பூவை நெய்தாய்..
நண்பன் அந்த பூவை கொய்தால்..
ஓ நெஞ்சே நெஞ்சே நீ என் செய்வாய்..
ஓ வெண்ணிலா..இரு வானிலா..நீ..

மழை நீரில் வானம் நனையாதம்மா..
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா..
எனை கேட்டு காதல் வரவில்லையே..
நான் சொல்லி காதல் விடவில்லையே..
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா..
இறந்தாலும் காதல் இறக்காதம்மா..

ஓ வெண்ணிலா இரு வானிலா..நீ..

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா..
எனதல்ல அதுவும் உனதல்லவா..
எதை கேட்ட போதும் தரக்கூடுமே..
உயிர் கூட உனக்காய் விடக்கூடுமே..
தருகின்ற பொருளாய் காதல் இல்லை..
தந்தாலே காதல் காதல் இல்லை...

ஓ வெண்ணிலா இரு வானிலா..நீ..
ஓ நண்பனே அறியாமலா..நான்..
கண்ணே கண்ணே காதல் செய்தாய்..
காதல் என்னும் பூவை நெய்தாய்..
நண்பன் அந்த பூவை கொய்தால்..
ஓ நெஞ்சே நெஞ்சே நீ என் செய்வாய்..
கண்ணே கண்ணே காதல் செய்தாய்..
காதல் என்னும் பூவை நெய்தாய்..
நண்பன் அந்த பூவை கொய்தால்..
ஓ நெஞ்சே நெஞ்சே நீ என் செய்வாய்..