ENNAI KAANAVILLAIYE

 என்னை காணவில்லையே




Movie: Kadhal desam 

Singers: S.P.Balasubramaniam,  O.S.Arun

Music director: A.R.Rahman 

அன்பே..அன்பே..அன்பே..அன்பே..

என்னை காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழல் இல்லாதவன் தெரியாதா..
என் நிழலும் நீயென புரியாதா..
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே அன்பே.. 
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே..
வா வா..என் வாசல் தான்..
வந்தால்..வாழ்வேனே நான்..

என்னை காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..

ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும்..
அன்பே உன் பேரை சிந்தித்தால்..
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்ட கூடும்..
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்..
நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்..
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூட தீ தான்..
உன் சுவாச காற்றில் வாழ்வேன் நான்..

என்னை காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழல் இல்லாதவன் தெரியாதா..
என் நிழலும் நீயென புரியாதா..
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே அன்பே.. 

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும்..
நீ என்னை நீங்கி சென்றாலே..
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும்..
நீ எந்தன் பக்கம் நின்றாலே..
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்..
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்..
நிஜம் உந்தன் காதல் என்றால்..

என்னை காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..
நான் நிழல் இல்லாதவன் தெரியாதா..
என் நிழலும் நீயென புரியாதா..
உடல் நிழலை சேரவே முடியாதா அன்பே அன்பே.. 
நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே..
வா வா..என் வாசல் தான்..
வந்தால்..வாழ்வேனே நான்..

என்னை காணவில்லையே நேற்றோடு..
எங்கும் தேடி பார்க்கிறேன் காற்றோடு..
உயிர் ஓடி போனதோ உன்னோடு அன்பே..