NENJUKULLE

 நெஞ்சுக்குள்ள 



Movie: Kadal 

Singers: sakthisree gopalan 

Music director: A.R.Rahman   


நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
இங்க எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ..
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி.. 
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி..
வண்ண மணியாரம் வலதுக்கை கடியாரம்..
ஆனை புலி எல்லாம் அடக்கும் அதிகாரம் 
நீர் போன பின்னும் நெழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குழியில் நெழல் வந்து விழுந்திருச்சே
அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலயே குனியலயே
கொட கம்பி போல மனம் குத்தி நிக்குதே

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
இங்க எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ..

பச்சி ஒறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு இச்சி மரத்து மேல எல கூட தூங்கிருச்சு..
காசநோய்காரிகளும் கண்ணுறங்கும் வேளையில ஆச நோய் வந்த மக அரை நிமிசம் தூங்கலயே..

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
இங்க எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ..

ஒரு வாய் எறங்கலயே உள் நாக்கு நனையலயே ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலயே..
ஏழ இளஞ்சிறுக்கி ஏதோ சொல்ல முடியலயே 
இரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே..

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
இங்க எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ..
வெள்ளை பார்வை வீசிவிட்டீர் முன்னாடி.. இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி..
வண்ண மணியாரம் வலதுக்கை கடியாரம்..
ஆனை புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்..
நீர் போன பின்னும் நிழல் மட்டும் போகலயே போகலயே..
நெஞ்சுக்குழியில் நிழல் வந்து விழுந்திருச்சே..
அப்ப நிமிந்தவ தான் அப்பறமா குனியலயே குனியலயே..
கொட கம்பி போல மனம் குத்தி நிக்குதே..

நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்..
இங்க எத்திசையில் எம் பொழப்பு விடிஞ்சிருக்கோ..