MINSARAM EN MEEDHU PAAIGINDRADHE
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
Movie: Run
Singers: harish ragavendra, Sadhana sargham
Music director: Vidyasagar
ஆண்: மின்சாரம் என் மீது பாய்கின்றதே..
பெண்: உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே..
ஆண்: மின்சாரம் என் மீது பாய்கின்றதே..
பெண்: உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே..
ஆண்: உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே..
பெண்: உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே..
ஆண்: நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன் உதடுகள் வேர்க்கும் வரை..
உண்மையில் நானும் யோக்கியன் தானடி உன்னை பார்க்கும் வரை..
காதல் தீயே ஓ காதல் தீயே காதல் தீயே காதல் தீயே..
மின்சாரம் என் மீது பாய்கின்றதே..
பெண்: உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே..
ஆண்: உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே..
பெண்: உள் நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே..
பெண்: என்னை விட இந்த உலகிலே..
உன்னை மிக மிக விரும்பினேன்..
ஆண்: உந்தன் அன்பு தரும் சுகத்தினால்..
இன்னும் உயிருடன் இருக்கிறேன்..
பெண்: ம்ம் ம்ம் ம்ம் தீ கூட தின்ன தின்ன தித்திக்கும் என்று கண்டேன்..
அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன்..
ஆண்: பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன்..
உன்னை நான் பார்த்த பின் தான் கன்னத்தில் போட்டு கொண்டேன்..
காதல் தீயே ஓ காதல் தீயே காதல் தீயே காதல் தீயே..
பெண்: மெல்ல மெல்ல எந்தன் உயிரினை..
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்..
ஆண்: கொள்ளை அடித்தது நீயடி..
என்னை குற்றம் சொல்லி திரிகிறாய்..
பெண்: ஆஆ பொல்லாத இம்சை ஒன்றில்
புரியாமல் மாட்டிக்கொண்டேன் இம்சைக்கு இன்னொரு பேர் காதல் தான் என்று கண்டேன்..
ஆண்: அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்க கண்டேன்..
ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்த கற்று கொண்டேன்..