ICHU THAA ICHU THAA

 இச்சு தா இச்சு தா




Movie:  Run

Singers: Devan,  sowmya rao, naveen, Pop shalini

Music director: Vidyasagar 


பெண்: ஹே இச்சு தா இச்சு தா..
கன்னத்துல இச்சு தா..

ஆண்: ஹே பிச்சு தா பிச்சு தா..
கன்னங்கள பிச்சு தா..

பெண்: திட்டம் போட்டு திருடிய கொள்ளைக்காரா..
வெக்க பட வெக்குறியே வெள்ளைக்காரா..

ஆண்: என்னை கொல்ல உன்னை பெத்தா உன் ஆத்தா..
என் உள் மனச கடையுற கடையுற கடையுற ஓர் மத்தா..

பெண்: ஹே இச்சு தா இச்சு தா..
கன்னத்துல இச்சு தா..

ஆண்: ஹே பிச்சு தா பிச்சு தா..
கன்னங்கள பிச்சு தா..

பெண்: பஞ்சுமிட்டாய் கசக்குது கசக்குது..
பட்டாம்பூச்சி கடிக்குது கடிக்குது..
அனிச்சம் பூவும் உறுத்துது உறுத்துது ஏன்னு தெரியாதா..

ஆண்: திராட்சை தின்னா எரியுது எரியுது..
புல்லில் நடந்தா வலிக்குது வலிக்குது..
வெயில் சுட்டால் ஜில்லுன்னு குளிருது ஏன்னு புரியாதா..

பெண்: என் வாசலிலே கோலமிட கூட்டி வைக்கிறேன்..
எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்..

ஆண்: என் வீட்டுக்கு தான் போய் வர எத்தனிக்கிறேன்..
உன் வீட்ட வந்து முட்டி நிக்கிறேன்..

பெண்: உன்ன காதலிச்சு உள்ள மூடி வெச்சு
தேள் கொட்ட விட்டு திருடனா திருடனா திருடனா நின்னேனே..

பெண்: ஹே இச்சு தா இச்சு தா..
கன்னத்துல இச்சு தா..

ஆண்: ஹே பிச்சு தா பிச்சு தா..
கன்னங்கள பிச்சு தா..

ஆண்: மனச மனச மறியல் செய்யற..
வயச வயச தரியில் நெய்யற..
உயிர உயிர உளியில் மாட்டுற ஏன்டி திமிராடி..

பெண்: சிரிச்சி சிரிச்சி அவியல் செய்யற..
மொறைச்சி மொறைச்சி பொறியல் பண்ணுற..
உதட்ட கடிச்சி துவையல் ஆக்குற ஏன்டா கொழுப்பாடா..

ஆண்: அட கீழ் உதட்டில் செய்க எல்லாம் செய்றாளே..
ஆனா மேல் உதட்டில் வைய்யுறாளே..

பெண்: அட எப்பருந்து  இப்படி நீ மக்கான..
என்ன புரிஞ்சிக்க மாக்கானே..

ஆண்: நான் அச்சு கொட்ட நீ உச்சி கொட்ட..
நான் எப்படி தான் உன் கிட்ட உன் கிட்ட குப்பை கொட்ட போறேனோ..

பெண்: ஹே இச்சு தா இச்சு தா..
கன்னத்துல இச்சு தா..

ஆண்: ஹே பிச்சு தா பிச்சு தா..
கன்னங்கள பிச்சு தா..

பெண்: திட்டம் போட்டு திருடிய கொள்ளைக்காரா..
வெக்க பட வெக்குறியே வெள்ளைக்காரா..

ஆண்: என்னை கொல்ல உன்னை பெத்தா உன் ஆத்தா..
என் உள் மனச கடையுற கடையுற கடையுற ஓர் மத்தா..