POI SOLLA KOODADHU
பொய் சொல்ல கூடாது
Movie: Run
Singer: Hariharan, sadhana sargham
Music director: Vidyasagar
பொய் சொல்ல கூடாது காதலி..
பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
பொய் சொல்ல கூடாது காதலி..
பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்..
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்..
பொய் ஒன்றை ஒப்பித்தாய்..
ஐயையோ தப்பித்தாய்..
கண்மூடி தேடத்தான்..
கனவெங்கும் தித்தித்தாய்..
பொய் சொல்ல கூடாது காதலி..
பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்..
ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன்..
கண்டவுடன் எனையே...தின்றதடி விழியே..
என்னை விட்டு தனியே..சென்றதடி நிழலே..
அடி சுட்டும் விழி சுடரே..நட்சத்திர பயிரே..
ரெக்கை கட்டி வா நிலவே..
பொய் ஒன்றை ஒப்பித்தாய்..
ஐயையோ தப்பித்தாய்..
கண்மூடி தேடத்தான்..
கனவெங்கும் தித்தித்தாய்..
பொய் சொல்ல கூடாது காதலி..
பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே..
நீ ஒற்றை துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே..
கன்னக்குழி நடுவே..சிக்கிக்கொண்டேன் அழகே..
நெற்றிமுடி வழியே..தப்பி வந்தேன் வெளியே..
அடி பொத்தி வைத்த புயலே..
தத்தளிக்கும் திமிரே..
வெட்கம் விட்டு வா வெளியே..
நில் என்று கண்டித்தாய்..
உள் சென்று தண்டித்தாய்..
சொல் என்று கெஞ்சத்தான்..
சொல்லாமல் வஞ்சித்தாய்..
பொய் சொல்ல கூடாது காதலி..
பொய் சொன்னாலும் நீயே என் காதலி..
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்..
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்..
பொய் ஒன்றை ஒப்பித்தாய்..
ஐயையோ தப்பித்தாய்..
கண்மூடி தேடத்தான்..
கனவெங்கும் தித்தித்தாய்..
.................
Songs lyrics from Run movie:
