VAANUM MANNUM KATTI KONDADHE
வானும் மண்ணும்
Movie: Kadhal mannan
Singers: Hariharan, K.S.Chithra
Music director: Bharadwaj
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே..
பெண்: ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்..
அந்த பொறி இன்று தோன்றியதே..
ஆண்: காதல் இடம் பார்ப்பதில்லை..
அது இனம் பார்ப்பதில்லை..
அது பொசுக்கென்று பூத்திடுதே..
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது..
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..
ஆண்: வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே..
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே..
பெண்: ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்..
அந்த பொறி இன்று தோன்றியதே..
ஆண்: காதல் இடம் பார்ப்பதில்லை..
அது இனம் பார்ப்பதில்லை..
அது பொசுக்கென்று பூத்திடுதே..
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது..
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..
ஆண்: நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை..
பெண்: மௌனமே மொழி ஆனதால் அட பாஷை என்பதொரு தொல்லை..
அடுத்தொன்று தோன்றவில்லை..
ஆண்: ஆ..வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை..
பெண்: வெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை..
ஆண்: பிறக்கும் மொட்டுக்கள் தேதி பார்ப்பதுவும் இல்லை..
பெண்: ஆ..உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை..
ஆண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது..
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..
பெண்: எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ..
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவதும் உண்டோ..
உணர்ச்சிக்கு பாதை உண்டோ..
ஆண்: விதியினும் காதல் வலியது
இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ..
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ..
கனவுக்கு வேலியுண்டோ..
பெண்: காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவுமில்லை..
ஆண்: ஆ..ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவுமில்லை..
பெண்: ஒரு நீரோடை மீனுக்கு கரை மேல் ஆசை வந்தது..
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..
ஆண்: வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே..
பெண்: மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே..
.....................
Songs lyrics from kadhal mannan movie: