MUDHALVANE
முதல்வனே
Movie: Mudhalvan
Singers:S.Janaki, Shankar mahadevan, mano, Srinivas
Music director: A.R.Rahman
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே..
பெண்: முதல்வனே என்னை கண் பாராய்..
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா..
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே..
முத்த நிவாரணம் எனக்கில்லையா..
வாளின் ஓசை கேட்கும் தலைவா..
வளையல் ஓசை கேட்கவில்லையா..
முதல்வா..முதல்வா..
முதல்வா..
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே..
பெண்: ஆ..கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி
குறிப்பு எழுதுங்கள் எந்தன் தோளில்..
ஆண்: ஆ..பீலி ஒன்றை எடுத்து தேனில் நனைத்து
கையொப்பம் இடுவேன் உந்தன் மார்பில்..
பெண்: உலகம் வாழ நிதி ஒதுக்கு..
என் உயிரும் வாழ மதி ஒதுக்கு..
ஆண்: அரசன் வாழ விதி இருக்கு..
அதற்கு நீதான் விதிவிலக்கு..
பெண் : மன்னனே..
மன்னனே இதோ இவள் உனக்கு..
முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா
பெண்: முதல்வனே என்னை கண் பாராய்..
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா..
ஓ காதல் பஞ்சம் வந்து நொந்தேனே..
முத்த நிவாரணம் எனக்கில்லையா..
வாளின் ஓசை கேட்கும் தலைவா..
வளையல் ஓசை கேட்கவில்லையா..
முதல்வா..
பெண்: பள்ளி வாசல் திறந்தாய்..
பள்ளி திறந்தாய்..
பள்ளியறை வர நேரம் இல்லையா..
ஆண்: ஓ ஊரடங்கு தளர்த்தி..
வரிகள் தளர்த்தி..
உடைகள் தளர்த்திட வேண்டும் இல்லையா..
பெண்: ஆசைப்பூவை தவிக்க விட்டு..
அமைச்சரோடு நகர்வலமோ..
ஆண்: உனது கண்ணில் நீர் துடைத்தால்..
ஊர்குழாயில் நீர் வருமோ..
பெண்: வேந்தனே..
வேந்தனே உந்தன் வரம் வருமோ..
முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா வா முதல்வா முதல்வா முதல்வா
பெண்: முதல்வனே என்னை கண் பாராய்..
முந்தானை கொடியேற்ற நேரமில்லையா..
ஓ காதல் பஞ்சம் வந்து
ஆண்: நொந்தாயோ..
பெண்: முத்த நிவாரணம்
ஆண்: உனக்களிப்பான்..
பெண்: வாளின் ஓசை
ஆண்: தீரும் போது..
பெண்: வளையல் ஓசை
ஆண்: கேட்கவருவான்..
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே
முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே..
......................
Songs lyrics from Mudhalvan Movie:
