AZHAGANA RAATCHASIYE

 அழகான ராட்சசியே



Movie:  Mudhalvan

Singers: S.P.Balasubramaniam,  Harini 

Music director: A.R.Rahman 


ஆண்: அழகான ராட்சசியே..
அடி நெஞ்சில் குதிக்கிறியே..
முட்டாசு வார்த்தையிலே..
பட்டாசு வெடிக்கிறியே..
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே..
அழகான ராட்சசியே..
அடி நெஞ்சில் குதிக்கிறியே.. 
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே..

பெண்: அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா..
கொழந்த குமரி நான் ஆமா..
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடிக்குமா..
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற..
கடலகாடு நீ ஆமா..
உயிர உரிச்ச நீ கயிறு திரிக்குற சுகம் சுகமா..

ஆண்: கிளியே..ஆலங்கிளியே..
குயிலே..ஏலங்குயிலே..
அழகான ராட்சசியே..
அடி நெஞ்சில் குதிக்கிறியே..
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே..

ஆண்: சூரியன ரெண்டு துண்டு செஞ்சு கண்ணில் கொண்டவளோ..ஓஓ..ஓஓ..
சந்திரன கள்ளுக்குள்ள ஊற வெச்ச பெண்ணிவளோ..ஓஓ..
ராத்திரிய தட்டி தட்டி கெட்டி செஞ்சி மையிடவா..ஓஓ..
மின்மினிய கன்னத்துல ஒட்ட வெச்சு கை தட்டவோ..ஓஓ..

பெண்: துறவி என்ன தொலச்சுபுட்ட.. 
தூக்கம் இப்ப தூரமய்யா..
தலைக்கு வெச்சி நான் படுக்க..
அழுக்கு வேட்டி தாருமய்யா..
தூங்கும் தூக்கம் கனவா..

ஆண்: கிளியே..ஆலங்கிளியே..
குயிலே..ஏலங்குயிலே..
அழகான ராட்சசியே..
அடி நெஞ்சில் குதிக்கிறியே..
முட்டாசு வார்த்தையிலே..
பட்டாசு வெடிக்கிறியே..
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே..

சோளக்கொல்ல பொம்மயோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள..
புளியம் பூவே..
சோளக்கொல்ல பொம்மயோட சோடி சேர்ந்து ஆடும் புள்ள..
மகிழம் பூவே..

பெண்: தேன் கூட்ட பிச்சி பிச்சி எச்சி வைக்க லட்சியமா..ஆஆ..ஓஓ..
காதல் என்ன கட்சி விட்டு கட்சி மாறும் காரியமா..ஓஓ..
பொண்ணு சொன்னா தலைகீழா ஒக்கி போட முடியுமா..ஓஓ..
நான் நடக்கும் நிழலுக்குள் நீ வசிக்க சம்மதமா..

ஆண்: நீராக நானிருந்தால் உன் நெத்தியில நானிறங்கி..
கூரான உன் நெஞ்சில் குதிச்சி அங்க குடியிருப்பேன்..
காடா வீணா போனேன்.. 

ஆ&பெ: கிளியே..ஆலங்கிளியே..

ஆண்: குயிலே..ஏலங்குயிலே..
அழகான ராட்சசியே..
அடி நெஞ்சில் குதிக்கிறியே..
முட்டாசு வார்த்தையிலே..
பட்டாசு வெடிக்கிறியே..
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே..

பெண்: அருகம்புல்லுக்கு அறுக்க தெரியுமா..
கொழந்த குமரி நான் ஆமா..
அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடிக்குமா..
வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற..
கடலகாடு நீ ஆமா..
உயிர உரிச்சு நீ கயிறு திரிக்குற சுகம் சுகமா..

  




......................





Songs lyrics from Mudhalvan Movie: