KURUKKU CHIRUTHAVALE
குறுக்கு சிறுத்தவளே
Movie: Mudhalvan
Singers: Hariharan, Mahalakshmi iyer
Music director: A.R.Rahman
ஆண்: குறுக்கு சிறுத்தவளே..
என்ன குங்குமத்தில் கரைச்சவளே..
நெஞ்சில் மஞ்ச தேச்சி குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே..
உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே..
குறுக்கு சிறுத்தவளே..
என்ன குங்குமத்தில் கரைச்சவளே..
நெஞ்சில் மஞ்ச தேச்சி குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே..
உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே..
பெண்: ஒரு கண்ணில் நீர் கசிய..
உதட்டு வழி உசிர் கசிய..
உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே..
அட ஆத்தோட விழுந்த எல..
அந்த ஆத்தோட போவது போல்..
நெஞ்சு உன்னோடதான் பின்னோடுதே..
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே...
ஆண்: குறுக்கு சிறுத்தவளே..
என்ன குங்குமத்தில் கரைச்சவளே..
நெஞ்சில் மஞ்ச தேச்சி குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே..
உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே..
பெண்: கம்பங்சங்கு விழுந்த மாதிரியே..
கண்ணுக்குள்ள நொழைஞ்சு உறுத்துறியே..
ஆண்: கொடிய விட்டு குதிச்ச மல்லிகையே..
ஒரு மொழி சிரிச்சி பேசறியே..
பெண்: வாயி மேல வாய வெச்சு வார்த்தைகள உறிஞ்சிபுட்ட..
விரல வெச்சு அழுத்திய கழுத்துல கொளுத்திய வெப்பம் இன்னும் போகல..
ஆண்: அடி ஒன்போல செவப்பு இல்ல..
கணுக்கால் கூட கருப்பு இல்ல..
நீ தீண்டும் இடம் தித்திக்குமே..
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே..
குறுக்கு சிறுத்தவளே..
என்ன குங்குமத்தில் கரைச்சவளே..
நெஞ்சில் மஞ்ச தேச்சி குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே..
உன் கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே..
ஆண்: ஒரு தடவ இழுத்து அணைச்சபடி..
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே..
பெண்: ஒம்முதுக தொலைச்சி வெளியேற..
இன்னும் கொஞ்சம் இருக்கு என்னவனே..
ஆண்: மழையடிக்கும் சிறு பேச்சு..
வெயிலடிக்கும் ஒரு பார்வ..
ஒடம்பு மண்ணில் புதையுற வரையில் உடன் வர கூடுமோ..
பெண்: உசிர் என்னோட இருக்கையிலே..
நீ மண்ணோடு போவதெங்கே..
அட உன் ஜீவனில் நானில்லையா..
கொல்ல வந்த மரணம் கூட குழம்புமய்யா..
ஆண்: குறுக்கு சிறுத்தவளே..
என்ன குங்குமத்தில் கரைச்சவளே..
மஞ்ச தேச்சி குளிக்கையில் என்ன கொஞ்சம் பூசு தாயே..
கொலுசுக்குள் மணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே..
பெண்: ஒரு கண்ணில் நீர் கசிய..
உதட்டு வழி உசிர் கசிய..
உன்னாலே சில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே..
அட ஆத்தோட விழுந்த எல..
அந்த ஆத்தோட போவது போல்..
நெஞ்சு உன்னோடதான் பின்னோடுதே..
அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே...
ஆண்: குறுக்கு சிறுத்தவளே..
என்ன குங்குமத்தில் கரைச்சவளே..
நெஞ்சில் மஞ்ச தேச்சி குளிக்கையில்
பெண்: உன்ன கொஞ்சம் பூசுவேன்ய்யா
ஆண்: உன் கொலுசுக்குள் மணியாக
பெண்: உன்ன கொஞ்சம் மாத்துவேன்ய்யா..
......................
Songs lyrics from Mudhalvan Movie: