ORU NAALUKKUL
ஒரு நாளுக்குள்
Movie: Yaaradi nee mohini
Singers: Karthik, Rita
Music director: Yuvan Shankar raja
ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு..
உன் பார்வையில் விழுகிற பொழுது..
தொடு வானத்தை தொடுகிற உணர்வு..
ஓஓஓஓ ஓ..ஓஓஓஓ ஓ..
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு..
உன் பார்வையில் விழுகிற பொழுது..
தொடு வானத்தை தொடுகிற உணர்வு..
ஓஓஓஓ ஓ..ஓஓஓஓ ஓ..
பெண்: ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்..
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்..
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்..
நின்றாலும் கால்கள் மிதக்கும்..
ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு..
உன் பார்வையில் விழுகிற பொழுது..
தொடு வானத்தை தொடுகிற உணர்வு..
ஓஓஓஓ ஓ..ஓஓஓஓ ஓ..
ஆண்: நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்..
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்..
நீ காதலா..இல்லை கடவுளா..
புரியாமல் திணறி போனேன்..
யாரேனும் அழைத்தால் ஒருமுறை தான்..
நீதானோ என்றே திரும்பிடுவேன்..
தினம் இரவினில்..உன் அருகினில்..
உறங்காமல் உறங்கி போவேன்..
பெண்: இது ஏதோ புரியா உணர்வு..
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது..
ஒரு பனிமலை ஒரு எரிமலை..
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்..
ஆண்: ஒரு நாளுக்குள் எத்தனை கனவு..
உன் பார்வையில் விழுகிற பொழுது..
தொடு வானத்தை தொடுகிற உணர்வு..
ஓஓஓஓ ஓ..ஓஓஓஓ ஓ..
ஆண்: நதியாலே பூக்கும் மரங்களுக்கு..
நதி மீது இருக்கும் காதலினை..
நதி அறியுமா.. கொஞ்சம் புரியுமா..
கரையோர கனவுகள் எல்லாம்..
உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்..
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்..
நீ பறக்கலாம்..உன்னை மறக்கலாம்..
திறக்காத கதவுகள் திறக்கும்..
பெண்: தன் வாசனை பூ அறியாது..
கண்ணாடிக்கு கண் கிடையாது..
அது புரியலாம்..பின்பு தெரியலாம்..
அதுவரையில் நடப்பது நடக்கும்..
................
Songs lyrics from Yaaradi nee mohini movie:
