KALYANAM ENBADHU

கல்யாணம் என்பது



Movie: Priyamanavale 

Singers: K.J.Yesudas 

Music director: S.A.Rajkumar 


கார்யேஷுதாசி கரநேஷுமந்த்ரி
போஜேஷு மாதா ஷயனேஷு ரம்பா

கல்யாணம் என்பது பூர்வ பந்தம்..
உடலோடு உயிர் குடியேறிட வாழும் சொந்தம்..
சம்சாரம் என்பது ஆதி அந்தம்..
ஒன்றாகிடும் உறவாடிடும் அன்பால் என்றும்..
ஏழேழு ஜென்மமே மணமாலை பந்தமே..
ஆயிரம் காலமே வாழமே..

வெளிச்சமாகும் வீடு பெண் விளக்கேற்றினால்..
வெற்றியாகும் வாழ்வு பெண் வழி காட்டினால்..
விலகிப் போகும் மோகம் பெண் விரல் தீண்டினால்..
தெய்வம் கூட இளகும் பெண் வரம் வேண்டினால்..
எங்கு ஆணின் பின்பலம் என்றும் ஆகும் பெண் பலம்..
நீ எது நான் ஏது இங்கே..
நம்மை எல்லாம் சுமந்தவள் யாரடா..

கல்யாணம் என்பது பூர்வ பந்தம்..
உடலோடு உயிர் குடியேறிட வாழும் சொந்தம்..

தலைவன் கூடும்போது பெண் விருந்தாகிறாள்..
தலைவன் வாடும்போது பெண் மருந்தாகிறாள்..
தலைவன் கொஞ்சும் போது பெண் சேயாகிறாள்..
தலைவன் துஞ்சும் போது பெண் தாயாகிறாள்..
பெண் பெருமை சொல்லவா..
கடல் போன்றதல்லவா..
நீர் வாழ நீர் வார்க்கும் மேகம்..
அதற்கொரு உவமை தான் பெண்மையே..