ENNAVO ENNAVO

 என்னவோ என்னவோ



Movie: Priyamanavale 

Singers: Hariharan,  Mahalakshmi iyer 

Music director: S.A.Rajkumar 


பெண்: என்னவோ என்னவோ என் வசம் நானில்லை..
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை..
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்..
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்..
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்..
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்..
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ..
பிரியமானவனே..

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை..
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை..

ஆண்: மழை தேடி நான் நனைவேன்
சம்மதமா சம்மதமா..

பெண்: குடையாக நான் வருவேன்..
சம்மதமா சம்மதமா..

ஆண்: விரல் பிடித்து நகம் கடிப்பேன்
சம்மதமா சம்மதமா..

பெண்: நீ கடிக்க நான் வளர்ப்பேன் 
சம்மதமா சம்மதமா..

ஆண்: விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா..

பெண்: இடைவேளை வேண்டுமென்று இடை கேட்கும் சம்மதமா..

ஆண்: நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா..

பெண்: என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா..

ஆண்: என்னவோ என்னவோ என் வசம் நானில்லை..
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை..

ஆண்: இமையாக நானிருப்பேன் 
சம்மதமா சம்மதமா..

பெண்: இமைக்காமல் பார்த்திருப்பேன் 
சம்மதமா சம்மதமா..

ஆண்: கனவாக நான் வருவேன் 
சம்மதமா சம்மதமா..

பெண்: கண்மூடி தவமிருப்பேன் 
சம்மதமா சம்மதமா..

ஆண்:  ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா..

பெண்: பலகோடி பௌர்ணமிகள் பார்த்திடவே சம்மதமா..

ஆண்: பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா..

பெண்: பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா..

ஆண்: என்னவோ என்னவோ என் வசம் நானில்லை..
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை..
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்..
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்..
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்..
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்..

பெண்: என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ..

ஆண்: பிரியமானவளே..

பெண்: பிரியமானவனே..

ஆண்: பிரியமானவளே..

பெண்: பிரியமானவனே..





......................




Songs lyrics from Priyamanavale Movie: