ENAKORU SNEGIDHI
எனக்கொரு சிநேகிதி
Movie: Priyamanavale
Singers: Hariharan, Mahalakshmi iyer
Music director: S.A.Rajkumar
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி..
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி..
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்..
பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்..
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி..
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி..
பெண்: உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்..
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்..
ஆண்: மேகமது சேராது வான் மழையும் வாராது..
தனிமையில் தவித்தேனே..
உன்னை எண்ணி இளைத்தேனே..
பெண்: மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது..
உனக்கு இது தெரியாதா இலக்கணம் புரியாதா..
ஆண்: சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்..
பெண்: வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப் போடும்..
ஆண்: மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே..
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி..
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி..
பெண்: கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்..
அணைப்பது சுகமாகும்..
அது ஒரு தவமாகும்..
ஆண்: மோகம் ஒரு பூப்போல..
தீண்டியதும் தீப்போல..
கனவுகள் ஒருகோடி..
நீ கொடு என் தோழி..
பெண்: உன்னை தந்து என்னை நீயும் வாங்கிக்கொண்டு நாட்கள் ஆச்சு..
ஆண்: உன்னைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு..
பெண்: விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்..
ஆண்: எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி..
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி..
பெண்: உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்..
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்..
..................
Songs lyrics from Priyamanavale movie: