ORU PONNU ONNU

 ஒரு பொண்ணு ஒன்னு



Movie: Kushi

Singers: Hariharan,  Anuradha sriram 

Music director: Deva 


ஆண்: ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்..
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்..
அவ சிரிச்ச சிரிப்புல நூறு பேர் செத்துப் போயிட்டான்..
ஐயையோ..ஐயையோ..ஐயையோ..

ஆண்: ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்..
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்..
அவ சிரிச்ச சிரிப்புல நூறு பேர் செத்துப் போயிட்டான்..
ஐயையோ..ஐயையோ..ஐயையோ..

ஆண்: பாப்பு.. பாப்பு..பாப்பூ..ஊ......பாப்பு..

பெண்: ஒரு ஆளு ஒன்னு நான் பார்த்தேன்..
கண்ண தொறந்துபாக்க சொல்லி கேட்டேன்..
அவன் பார்த்த பார்வையில பச்ச தண்ணி பத்திக்கிடுச்சு..

ஐயையோ..ஐயையோ..ஐயையோ..

பெண்: பாப்பு.. பாப்பு..பாப்பூ..ஊ......பாப்பு.


ஆண்: தாய் தந்தை முகமே மறந்து.. நெஞ்சில் உந்தன் முகம் எழுதே..
பரீட்சை எழுதும் பொழுதும் கவிதை எழுத வருதே..

பெண்: குளிக்கும் அறையில் ஒரு கூத்து..
நினைக்கும்போது வெட்கம் வருதே..
ஆடையில்லாமல் வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே..

ஆண்: ஒரு கொசு கடித்தாலும் உயிர் துடிக்கும்..
அது இதுவரை எனக்குள்ள வழக்கம்..

பெண்: இன்று தேள் கடித்தாலும் தெரிவதில்லை..
அட என்னாச்சு என்னாச்சு எனக்கும்..
பாப்பு பாப்பு..பாப்பு பாப்பு..

ஆண்:  கண்ண விழிச்சிருக்கேன்.. கனவுகள் வருது..
கண்ண மூடி கெடந்தும் காட்சிகள் வருது..
இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு..

பெண்: ஐயையோ.. ஐயையோ.. ஐயையோ..
இது ஏன் என்று தெரியவில்லை..
இது நீதானா புரியவில்லை..
ஒரு வாய் பேச முடியவில்லை..
இது இனிப்பில் நனைந்த கவலை..


பெண்: ஜாமத்து சந்திரன் வந்து ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்..
தென்றலை நான் துணைக்கழைத்தால் தீயை வாரி இறைக்கும்..

ஆண்: நவம்பர் மாதத்து மழையில் நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும்..
எச்சிலை விழுங்கும் பொழுது வறண்டு தொண்டை வலிக்கும்..

பெண்: அந்த பெண்களை பார்த்தால் வெறுப்பு வரும்.. 
என் தனிமைக்கு நிழல் கூட பகையாகும்..

ஆண்: அட ஆண்களைப் பார்த்தால் எரிச்சல் வரும்..
என் இரவுக்கு வெளிச்சம் சுமையாகும்..
பாப்பு பாப்பு..பாப்பு பாப்பு..

பெண்: இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை..
இதயத்தின் ஓசை தூங்க விடவில்லை..
இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு..

ஐயையோ..ஐயையோ..ஐயையோ..

ஆண்: ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்..
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்..
அவ சிரிச்ச சிரிப்புல நூறு பேர் செத்துப் போயிட்டான்..

பெண்: அவன் பார்த்த பார்வையில பச்ச தண்ணி பத்திக்கிடுச்சு..

ஆண்: அவ சிரிச்ச சிரிப்புல நூறு பேர் செத்துப் போயிட்டான்




.....................



Songs lyrics from Kushi movie:-