YAAR SOLVADHO

 யார் சொல்வதோ


Movie: Kushi

Singers:  Hariharan,  Sadhana sargham 

Music director: Deva 


பெண்:  யார் சொல்வதோ..யார் சொல்வதோ..
யார் சொல்வதோ..யார் சொல்வதோ..

ஆண்: மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்..
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்..
அது மலரின் தோல்வியா.. இல்லை காற்றின் வெற்றியா..
அது மலரின் தோல்வியா.. இல்லை காற்றின் வெற்றியா...

பெண்:  கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்..
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்..
அது கல்லின் தோல்வியா.. இல்லை உளியின் வெற்றியா..

ஆண்: யார் சொல்வதோ..யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ..யார் சொல்வதோ..

.........

ஆண்: மேகம் என்பது அட மழை முடிச்சு..
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்..

பெண்: காதல் என்பது இருமன முடிச்சு.. 
கண்கள் முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்..

ஆண்:  மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை..

பெண்: தேகங்கள் முட்டிக்கொள்வதாலே... ஊடல் என்று பொருள் இல்லை..

ஆண்: இதழ்கள் பொய் சொல்லும்..
இதயம் மெய் சொல்லும்..
தெரியாதா..உண்மை தெரியாதா..

பெண்: காதல் விதை போல..மௌனம் மண் போல..
முளைக்காதா..மண்ணை துளைக்காதா..

யார் சொல்வதோ..யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ.. யார் சொல்வதோ ..

பெண்:பனிகுடங்கள் மெல்ல உடைந்து விட்டால்..
உயிர் ஜனிக்கும்..உயிர் ஜனிக்கும்..

ஆண்:  ஓ..மௌன குடங்கள் மெல்ல உடைந்து விட்டால்..
காதல் பிறக்கும்..காதல் பிறக்கும்..

பெண்: உள்ளத்தை மூடி மூடி தைத்தால்..
கலை இல்லை..காதல் இல்லை..

ஆண்:உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்..
பயம் இல்லை..பாரம் இல்லை..

பெண்: நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்..
நனைக்காதா..நதி நனைக்காதா..

ஆண்:கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா..கதிர் திறக்காதா..

யார் சொல்வதோ..யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ..யார் சொல்வதோ..

 ஆண்:மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்..
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்..
அது மலரின் தோல்வியா.. இல்லை காற்றின் வெற்றியா..
அது மலரின் தோல்வியா.. இல்லை காற்றின் வெற்றியா...

பெண்:கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்..
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்..
அது கல்லின் தோல்வியா.. இல்லை உளியின் வெற்றியா..

யார் சொல்வதோ..யார் சொல்வதோ..
பதில் யார் சொல்வதோ..யார் சொல்வதோ..



...................



Songs lyrics from Kushi movie:-