MEGAM KARUKKUDHU

 மேகம் கருக்குது

Movie: Kushi

Singers: Harini 

Music director: Deva

தக்குசிக்கு தக்கஜின்..தக்குசிக்கு தக்கஜின்..தக்கசிக்கு தக்கஜின்..
தக்குசிக்கு தக்கஜின்..தக்குசிக்கு தக்கஜின்..தக்கசிக்கு தக்கஜின்..

தக்குசிக்கு தக்கஜின்..தக்குசிக்கு தக்கஜின்..தக்கசிக்கு தக்கஜின்..
தக்குசிக்கு தக்கஜின்..தக்குசிக்கு 

மேகம் கருக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
மின்னல் சிரிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
சாரல் அடிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
இதயம் பறக்குது....

மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே..
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே..

மேகம் கருக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
மின்னல் சிரிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
சாரல் அடிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
இதயம் பறக்குது..தக்குசிக்கு தக்கஜின்..

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்..
வானவில் கொடியில் என் ஆடை காயட்டும்..
மழையே.. துளி போடு..
என் மார்பே.. உன் வீடு..

மேகம் கருக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
மின்னல் சிரிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..

நிலாவே வா வா வா..
நில்லாமல் வா வா வா..
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா..
உன் கறையை சலவை செய்து விட வா..

புறாவே வா வா வா..
பூவோடு வா வா வா..
உன்னோட குளிருக்கு இடம் தரவா..
என் கூந்தலில் கூடு செய்து தரவா..

காற்றைப்போல் எனக்கு கூட சிறகொன்றும் கிடையாது..
தடை மீறி செல்லும்போது சிறை செய்ய முடியாது..
இளமையின் சின்னம்.. இளம் பட்டு வண்ணம்..
இன்னும் இன்னும் வளர்த்துக் கொள்வேன்..
இருபத்து ஒன்னு வயதுக்கு மேலே காலத்தை நிறுத்தி வைப்பேன்..ஹோ..

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்..
வானவில் கொடியில் என் ஆடை காயட்டும்..
மழையே.. துளி போடு..
என் மார்பே.. உன் வீடு..

தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு சிக்..
தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு தக்குசிக்கு சிக்..

ஓ..கனாவே வா வா வா..
கண்ணோடு வா வா வா..
விண்வெளியை அளந்திட சிறகு கொடு..
விண்மீனில் எனக்கு படுக்கை போடு..

மைனாவே வா வா வா..
மையோடு வா வா வா..
என் கண்கள் அழகின் ஒளிபரப்பு..
என் அழகை பறந்து பறந்து பரப்பு..

பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது..
அதனால்தான் ரெண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது..
பூக்களில் தேங்கும் பனித்துளி அள்ளி காலையில் குளித்து கொள்வேன்..
விடிகிற போது விடிகிறபோது வெளிச்சத்தை உடுத்திக் கொள்வேன்..ஹோ..

நான் சொல்லும் வேளையில் மழை நின்று போகட்டும்..
வானவில் கொடியில் என் ஆடை காயட்டும்..
மழையே.. துளி போடு..
என் மார்பே.. உன் வீடு..

மேகம் கருக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
மின்னல் சிரிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
சாரல் அடிக்குது..தக்குசிக்கு தக்கஜின்..
இதயம் பறக்குது.. 
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே..
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே..

தக்குசிக்கு தக்கஜின்..
தக்குசிக்கு தக்கஜின்..
தக்குசிக்கு தக்கஜின்..
தக்குசிக்கு தக்கஜின்..

......................

Songs lyrics from Kushi movie:-