KATTIPUDI KATTIPUDIDA
கட்டிபுடி கட்டிபுடிடா
Movie: Kushi
Singers: Shankar mahadevan, Vasundhara das
Music director: Deva
பெண்: கட்டிபுடி கட்டிபுடிடா..
கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா..
கட்டில் வரி போட போறேன்டா..
வரியை கட்டி விட்டு கட்டிபுடிடா..
கட்டில் வரி முத்தம் தானடா..
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா..
கட்டிபுடி கட்டிபுடிடா..
கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா..
ஆண்: எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்..
கண்டுபிடிப்பேன்..
கண்டுபிடிப்பேன்..கண்டுபிடிப்பேன்..
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்..
பெண்: எவ்விடத்தில் கண் முழிச்சோம்..
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு..
ஆண்: சுட்டுவிரல் தொட்டவுடன்..
கட்டவிழ்த்து அள்ளி கொட்டு கொட்டு கொட்டு..
பெண்: கட்டிக்கவா..ஒட்டிக்கவா..
கட்டிக்கவா ஒட்டிக்கவா கவா கவா கவா..
ஆண்: தொட்டுக்கவா..முட்டிக்கவா..
தொட்டுக்கவா முட்டிக்கவா..கவா கவா கவா..
பெண்: வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மணம் அல்லவா..
நரம்புகள் பூ பூக்கும் ஆசனம் இதுவல்லவா..
ஆண்: கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி..
பெண்: கட்டிபுடி கட்டிபுடிடா..
கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா..
பெண்: கட்டுத்தறி காளையை போல்..
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு..
ஆண்: வெட்டுபட்ட சேவலை போல்..
நெஞ்சு துள்ளும் தட்டு கெட்டு கெட்டு கெட்டு..
பெண்: நெஞ்சமெல்லாம் மீசை முடி..
நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம்..
ஆண்: கன்னி இதழ் காது மடல்..
கவ்வுவதால் புது இன்பம் இன்பம் இன்பம்..
பெண்: ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே..
கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே..
ஆண்: அதிகாலையில் பாரடி..
கட்டில் காணாமல் போகுமடி..
பெண்: கட்டிபுடி கட்டிபுடிடா..
கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா..
கட்டில் வரி போட போறேன்டா..
வரியை கட்டி விட்டு கட்டிபுடிடா..
கட்டில் வரி முத்தம் தானடா..
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா..
கட்டிபுடி கட்டிபுடிடா..
கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா..
ஆண்: எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்..
கண்டுபிடிப்பேன்..
கண்டுபிடிப்பேன்..கண்டுபிடிப்பேன்..
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்..
.................
Songs lyrics from Kushi movie:-
