MALARODU MALARINGU

 மலரோடு மலர் இங்கு



Movie: Bombay

Singers: Sujatha mohan,  Anuradha sriram 

Music director: A.r.rahman 


மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது..
மனதோடு மனமின்று பகைக் கொள்வதேனோ..
மதம் என்னும் மதம் ஓயட்டும்..
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது..
மனதோடு மனமின்று பகைக் கொள்வதேனோ..
மதம் என்னும் மதம் ஓயட்டும்..
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..

வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே..
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே..
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே..
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே..
காற்றுக்கு திசை இல்லை..தேசம் இல்லை..
மனதோடு மனம் சேரட்டும்..

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது..
மனதோடு மனமின்று பகைக் கொள்வதேனோ..
மதம் என்னும் மதம் ஓயட்டும்..
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..

துளி எல்லாம் கை கோர்த்து கடல் ஆகட்டும்..
கடலோடு கடல் சேரட்டும்..
துகள் எல்லாம் ஒன்றாகி மலை ஆகட்டும்..
விண்ணோடு விண் சேரட்டும்..
விடியாத இரவொன்று வானில் இல்லை..
ஒளியோடு ஒளி சேரட்டும்..




..................





Songs lyrics from Bombay movie:-