KUCHI KUCHI RAAKAMMA

 குச்சி குச்சி ராக்கம்மா



Movie: Bombay 

Singers: Hariharan,  Swarnalatha 

Music director:  A.r.rahman 


குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்..
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்..
சாதிசனம் தூங்கயில.. சாமக்கோழி கூவையிலே..
குச்சி குச்சி ராக்கம்மா..
கூடசாலி ராக்கம்மா..

ஹைய ஹைய ஹை ஹையா..
ஹைய ஹையா ஹை..
ஹைய ஹைய ஹை ஹையா..
ஹைய ஹையா ஹை..

ஆண்: குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்..
ஏ கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்..
சாதிசனம் தூங்கயில.. சாமக்கோழி கூவையிலே..

குச்சி குச்சி ராக்கம்மா..
கூடசாலி ராக்கம்மா..

பெண்: குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா..
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..
சாதிசனம் தூங்கலயே.. சாமக்கோழி கூவலயே..
குச்சி குச்சி ராக்கம்மா வரமாட்டா நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..

ஆண்: காட்டு முயலுக்கு பனி பிடிக்கும்..
கான குயிலுக்கு வெயில் பிடிக்கும்..
ஆணி வேருக்கு மண் பிடிக்கும்..
ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்..

பெண்: அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும்..
அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்..
புருஷன் ஜாமத்தில் கணைக்கையிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்..

ஆண்: அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்..
அள்ளி அள்ளி நான் எடுத்தாலும் ஆனந்த பூவுக்கா பொன்மேனி வலிக்கும்..
ஆ..பொட்ட புள்ள பெத்து குடு..

பெண்: போதும் என்னை விட்டு விடு..

ஆண்:ஆஆஆ..பொட்ட புள்ள பெத்து குடு..
பெண்: போதும் என்னை விட்டு விடு..

ஆண்: வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு..

பெண்: குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா..
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..
சாதிசனம் தூங்கலயே.. சாமக்கோழி கூவலயே..

குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா..
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..
சாதிசனம் தூங்கலயே.. சாமக்கோழி கூவலயே..

குச்சி குச்சி ராக்கம்மா..
கூடசாலி ராக்கம்மா..

ஹைய ஹைய ஹை ஹையா..
ஹைய ஹையா ஹை..
ஹைய ஹைய ஹை ஹையா..
ஹைய ஹையா ஹை..
ஹைய ஹைய ஹை ஹையா..
ஹைய ஹையா ஹை..
ஹைய ஹைய ஹை ஹையா..
ஹைய ஹையா ஹை..

பெண்: சிறகு நீங்கினால் பறவையில்லை..
திரியை நீங்கினால் தீபம் இல்லை..
உன்னை நீங்கினால் நானில்லை..
உனக்கிது புரியவில்லை..

ஆண்: உடலை நீங்கினால் உயிரும் இல்லை..
ஒளியை நீங்கினால் ஒளியும் இல்லை..
உன்னை நீங்கினால் நானில்லை..
உனக்கிது தெரியவில்லை..

பெண்: பூமி சுற்றுவது நின்றுவிட்டால்..
புவியில் என்றுமே மாற்றமில்லை..
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால்..
எந்நாளும் பெண் வாழ்வில்  ஏற்றங்கள் இல்லை..
பொத்தி வச்ச ஆசை வந்து..

ஆண்: நெத்தியில துடிக்குது..

பெண்: பொத்தி வச்ச ஆசை வந்து..
ஆண்: நெத்தியில துடிக்குது..

பெண்: தொட்ட இடம் பத்திக்கொள்ளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு..

குச்சி குச்சி ராக்கம்மா..
கூடசாலி ராக்கம்மா..
குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா..
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..
சாதிசனம் தூங்கலயே.. சாமக்கோழி கூவலயே..
குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா..
நீ கொஞ்சி பேச பொண்ணு ஒன்னு தரமாட்டா..
சாதிசனம் தூங்கலயே.. சாமக்கோழி கூவலயே..
குச்சி குச்சி ராக்கம்மா..





.................





Songs lyrics from Bombay movie:-