KANNALANE
கண்ணாளனே
Movie: Bombay
Singer: chithra
Music director: A.r.rahman
குபுசிப குபுசிப குப்பச்ச குபுசிப குப்பச்ச..
குபுசிப குபுசிப குப்பச்ச குபுசிப குப்பச்ச
சலசல சலசல சோலைகிளியே சோடிய தேடிக்க
சிலுசிலு சிலுசிலு சக்கரை நிலவே மாலைய மாத்திக்க..
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க..
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வெச்சக்க..
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க..
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வெச்சக்க..
கண்ணாளனே..எனது கண்ணை நேற்றோடு காணவில்லை..
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை..
ஆளான ஓர் சேதி அறியாமலே..
அலைபாயும் சிறு பேதை நானோ..
உன் பேரும் என் பேரும் தெரியாமலே..
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ...
வாய் பேசவே வாய்ப்பில்லையே..
வலி தீர வழி என்னவோ...

வலி தீர வழி என்னவோ..
உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம்.. நெஞ்சம்..தறி கெட்டு தளும்புது நெஞ்சம்..
எந்தன் நூலாடை பறந்ததில் கொஞ்சம்..கொஞ்சம்..பிறை முகம் பார்த்தது கொஞ்சம்..
இரத்தம் கொதிகொதிக்கும்.. உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல...
சித்தம் துடிதுடிக்கும்..புயல் எதிர்த்திடும் ஓர் இலை போல..
பனி துளிதான் என்ன செய்யுமோ..
மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது..
மூங்கில் காடென்று ஆயினள் மாது..
கண்ணாளனே..எனது கண்ணை நேற்றோடு காணவில்லை..
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை..
ஆளான ஓர் சேதி அறியாமலே..
அலைபாயும் சிறு பேதை நானோ..
உன் பேரும் என் பேரும் தெரியாமலே..
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ...
வாய் பேசவே வாய்ப்பில்லையே..
வலி தீர வழி என்னவோ...
குபுசிப குபுசிப குப்பச்ச குபுசிப குப்பச்ச..
குபுசிப குபுசிப குப்பச்ச குபுசிப குப்பச்ச..
சலசல சலசல சோலைகிளியே சோடிய தேடிக்க..
சிலுசிலு சிலுசிலு சக்கரை நிலவே மாலைய மாத்திக்க..
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க..
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வெச்சக்க..
மாமன் காரன் ராத்திரி வந்தா மடியில கட்டிக்க..
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வெச்சக்க..
ஒரு மின்சார பார்வையின் வேகம்.. வேகம்.. உன்னோடு நான் கண்டு கொண்டேன்..
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்..
தாபம்..என்னோடு நான் கண்டு கொண்டேன்..
என்னை மறந்து விட்டேன்..
இந்த உலகத்தில் நான் இல்லை..நான் இல்லை..
உன்னை இழந்து விட்டால்... எந்த மலரிலும் தேன் இல்லை..தேன் இல்லை..
இது கனவா...இல்லை நினைவா..
என்னை கிள்ளி உண்மை தெளிந்தேன்..
உன்னை பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்...
கண்ணாளனே..எனது கண்ணை நேற்றோடு காணவில்லை..
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை..
ஆளான ஓர் சேதி அறியாமலே..
அலைபாயும் சிறு பேதை நானோ..
உன் பேரும் என் பேரும் தெரியாமலே..
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ...
வாய் பேசவே வாய்ப்பில்லையே..
வலி தீர வழி என்னவோ...
கண்ணாளனே..எனது கண்ணை நேற்றோடு காணவில்லை..
என் கண்களை பறித்து கொண்டு ஏன் இன்னும் பேசவில்லை..
கண்ணாளனே...
..........................
Bombay movie songs lyrics:-