VAANAM MELLA KEEZHIRANGI

 வானம் மெல்ல கீழிறங்கி



Movie: Neethane en ponvasantham 

Singers: Ilayaraja, Bela shende

Music director: Ilayaraja 


ஆண்: வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே..
தூரல் தந்த வாசம் இன்னும் வீசுதிங்கே..
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே..
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே..
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம் தருணம்..

பெண்: வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே..
தூரல் தந்த வாசம் இன்னும் வீசுதிங்கே..
வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே..
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே..

ஆண்: அன்று பார்த்தது அந்த பார்வை வேறடி.. 
இந்த பார்வை வேறடி..

பெண்: நெஞ்சில் கேட்குதே..
உள்ளம் துள்ளி ஓடி நீ வந்து போன காலடி..

ஆண்: கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஓ..
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்..

பெண்:  என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும் இங்கேயே இன்பம் துன்பம் நீ தானே..

ஆண்: உந்தன் மூச்சு காற்றை தான்..
எந்தன் சுவாசம் கேட்குதே..
அந்த காற்றை நெஞ்சின் உள்ளில் பூட்டி வைத்து காவல் காப்பேனே..

பெண்: வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே..
தூரல் தந்த வாசம் இன்னும் வீசுதிங்கே..

ஆண்: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே..
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே..

பெண்: பாதி வயதிலே தொலைந்த கதைகள்  தோன்றுது..
மீண்டும் பேசி இணையுது..

ஆண்: பாதை மாறியே பாதம் நான்கும் போனது..
மீண்டும் இங்கு சேர்ந்தது..

பெண்: அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்.. 
என் வாழ்வில் நுட்பமாக வந்தாயே..

ஆண்: நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீதான்.. 
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே..

பெண்: கண்கள் உள்ள காரணம்..

ஆண்: உன்னை பார்க்க தானடி..

பெண்: வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க இந்த கண்கள் போதாதே..

ஆண்: வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே..
தூரல் தந்த வாசம் இன்னும்  வீசுதிங்கே..

பெண்: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே..
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே..

ஆண்: பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி..
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம் தருணம்..

பெண்: வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில்  வந்தாடுதே..
தூரல் தந்த வாசம் எங்கும் வீசுதிங்கே..

ஆண்: வாசம் சொன்ன பாஷை என்ன உள்ளம் திண்டாடுதே..
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே..



................



Songs lyrics from Neethane en ponvasantham movie:-