ENNODU VAA VAA
என்னோடு வா வா
Movie: neethane en ponvasantham
Singer: Karthik
Music director: Ilayaraja
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்..
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்..
செல்ல சண்டை போடுகிறாய்..
தள்ளி நின்று தேடுகிறாய்..
ஆஆஆ.. அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா..
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்..
என்னோடு.. வா வா என்று..
சொல்ல மாட்டேன்..
போகமாட்டேன்..
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க..
நீ சாய்வது என்னை கொஞ்சம் பார்க்க தானடி..
கண்ணை மூடி தூங்குவதை போல்..
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்க தானடி..
என்ன என்ன சந்தேகம்
என்னை இனி எந்நாளும் தீயாக பார்க்காதடி..
சின்னப் பிள்ளை போல நீ அடம் பிடிப்பதென்ன சொல்ல..
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல..
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல கேட்டுக் கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்..
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்..
என்னோடு.. வா வா என்று..
சொல்ல மாட்டேன்..
போகமாட்டேன்..
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்னச் சின்ன தலைகணமே..
காதல் அதை பொறுக்கணுமே இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே..
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி..
மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி..
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே..
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்..
செல்ல சண்டை போடுகிறாய்..
தள்ளி நின்று தேடுகிறாய்..
ஆஆஆ.. அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா..
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்..
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்..
..............
Songs lyrics from neethane en ponvasantham movie:-
