KONJAM KONJAM ENAKUM UNNAI PIDICHURUKA
கொஞ்சம் கொஞ்சம்
Movie: Arindhum ariyamalum
Singers: Mahua cumbatt
Music director: Yuvan shankar raja
பெண்: கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏ புரியவில்லை..
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏ புரியவில்லை..
வெளியிலே மறைத்தேனே..
விருப்பமாய் நினைத்தேனே..
எனக்குள்ளே இருந்தானே இது காதல்தானா புரியவில்லை..
ஆண்: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உண்மை புதைக்காதே..

இவன் இருளா இல்லை ஒளியா
எனக்குள் குழப்பம் புரியவில்லை..
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்..
எனக்குள் இவனில்லை இவனுக்குள் நான் இல்லை இது சரியா புரியவில்லை..
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை வந்து விட்டதா புரியவில்லை..
ஆண்: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உண்மை புதைக்காதே..
பெண்: எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான் எப்படி புகுந்தான் புரியவில்லை..
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ..ஓ..
வழக்கம் போல் நடக்கிறான் வம்புகளும் புரிகிறான் என்ன நினைப்பான் புரியவில்லை..
நானாய் சொல்லி விட்டால் நானாய் ஒப்புக்கொண்டால் தவறில்லையா புரியவில்லை..
ஆண்: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உண்மை புதைக்காதே..
பெண்: கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏ புரியவில்லை..
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏ புரியவில்லை..
வெளியிலே மறைத்தேனே..
விருப்பமாய் நினைத்தேனே..
எனக்குள்ளே இருந்தானே இது காதல்தானா புரியவில்லை..
ஆண்: ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உண்மை புதைக்காதே..
.....................
Songs lyrics from arindhum ariyamalum movie: