USURU NARAMBULA NEE

 உசுரு நரம்புல


Movie: Irudhi suttru

Singers: Dhee

Music director: Santhosh narayanan


உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற..
மனச படுக்க வச்சு வெள்ள போர்வ போத்துற..
காத்தோட என் கண்ண கோக்காத நீ..
மொகம் காட்டாம தீ மூட்டி வாட்டாத நீ..
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ..
மனம் கேக்காம நான் வந்தேன் சாய்க்காத நீ..
என் சிரிப்பு ஒடஞ்சு செதறி கெடக்கு எப்போ வருவ எடுத்துக்க..
உன் நெனப்பில் மனசு கதறி கெடக்கு என்ன கொஞ்சம் சேத்துக்க..

மனசு வாசன வீசும் தெசையில உன்ன தேடி ஓடுனேன்..
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு உன்ன காட்டும் தேடுனேன்..
உன்ன காட்டும் தேடுனேன்..
உன்ன காட்டும் தேடுனேன்..

காத்தோட என் கண்ண கோக்காத நீ..
மொகம் காட்டாம தீ மூட்டி வாட்டாத நீ..
பாக்காம என் மூச்ச தேய்க்காத நீ.. 
மனம் கேக்காம நான் வந்தேன் சாய்க்காத நீ..
என் சிரிப்பு உடஞ்சு செதறி கெடக்கு எப்போ வருவ எடுத்துக்க..
உன் நெனப்பில் மனசு கதறி கெடக்கு என்ன கொஞ்சம் சேத்துக்க..