PODA PODA

 போடா போடா

Movie: Irudhi suttru

Singers: Pradeep kumar

Music director: Santhosh narayanun

சிடுசிடு சினம் சீறும் மனம்.. 
எதிர்ப்புகள் வரும் முறைத்து கடக்கிறேன்..
கடுகடு முகம் காயும் இரத்தம்..
கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன்..
பணிந்து நடக்கும் அடிமை இல்லை..
தன்மானமே பலம்..
இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மனம்..
போடா போடா என்னை கட்டும் விலங்கில்லை..ஓ..
போடா போடா எனக்கென்ன பயமில்லை..ஓ..
எரிகின்ற கோபங்கள் எரிபொருள் தரும்.. 
என் நரம்புகள் சுருட்டிட சக்கரம் வரும்..
போ என தீ மனம் அறிகுறி வரும்..
என் வாகன வேகத்தில் சூரியன் விழும் ஓ..
சக்கரம் சாலையில் சண்டையிடும்..
செல்லட்டும் என்னிடம் வந்துவிடும்..
போடா போடா என்னை கட்டும் விலங்கில்லை..ஓ..
போடா போடா எனக்கென்ன பயமில்லை..ஓ..

கரடு முரடன் எந்த கவலையும் இல்லை.. கடின வழியில் செல்லும் பயணம்  இது..
பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை 
ஒரு சண்டைக்காரனின் இதயம் இது..ஓ..
உலகம் ஒரு திசையில் நடத்திட ..
விரைந்து மறு திசையில் பறக்கிறேன்..
போடா போடா என்னை கட்டும் விலங்கில்லை..ஓ..
போடா போடா எனக்கென்ன பயமில்லை.ஓ..