NAANE INDHIRAN
நானே இந்திரன்
Movie: Singam 1
Singers: Benny dayal, Manicka vinayagam
Music director: Devi sri prasad
நாலு காலு பாய்ச்சலிலே..
ரெண்டு கண்ணு மேய்ச்சலிலே..
எட்டு திசை கூச்சலிலே ..
தட்டுகிற ஓசையிலே..
ஏ சுத்திவரான் சுழன்டு வரான் புயல் போல எங்கும்
அட பாய்ஞ்சு வரான் பறந்து வரான் நம்ம துரை சிங்கம்..
ஏய் நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள..
சூரியன போல் சுத்தி வருவேன்..
பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவன..
எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்..
ஏய் காக்கி சட்ட நாட்டாம நானு..
கைது பண்ணும் வேல இல்ல..
அண்ணன் தம்பி சண்டைக்கு வீணா..
கேசு போட தேவ இல்ல..
வீராதி வீரன் எல்லாம் எப்போதுமே வீராப்பா திரிவதில்ல..
ஏ சொல்லி தரவா ஏ அள்ளி விடவா..
ஏ சொல்லிதரவா வா வா ஏ அள்ளி விடவா ஆ..ஆ...ஆ..
ஏ அம்மாவின் கையில் சோறு..
அதில் உள்ள ருசியே வேறு..
தினந்தோறும் தின்னு பாரு..
உன்னோட ஆயுள் நூறு..
சொந்த பந்தங்கள் கூட இருந்தா..
வந்த துன்பங்கள் தூர பறக்கும்..
தாமிரபரணியில முங்கி குளிச்சா..
தரணி ஆளுகிற தெம்பு கிடைக்கும்..
ஊரோட இருக்கணும்டா..
என்ன போல பேரோட இருக்கணும்டா..
ஏ கத்து தரவா ஏ ஒத்துக்கிட வா..
கத்து தரவா வா வா ஒத்துக்கிடவா ஆ..ஆ..
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள..
சூரியன போல் சுத்தி வருவேன்..
ஏ சீறி வரும் காளை கூட ஒதுங்கும்..
இவன் பேர சொன்னா வன்முறையும்
அடங்கும்..
தந்தான தானனே தானநன்னானே
தந்தான தானனே தானநன்னானே
நல்லூரில் பொறந்த ஒரு தங்கம்
இவன் காக்கி சட்ட போட்ட சிங்கம்..
தந்தான தானனே தானநன்னானே
தந்தான தானனே தானநன்னானே
கருக்குவேல் ஐயனாரு..
கலையா தான் நிக்குறாரு..
களவாணி யாரும் வந்தா..
கள வாங்க விடமாட்டாரு..
ஓ எங்க ஊரில் ஒரு கெட்ட பழக்கம்..
யாரும் கேட்டாலும் அள்ளி கொடுப்போம்..
எதிரி வந்தாலும் நாங்க மதிப்போம்..
எந்த நிலைமையிலும் மேல இருப்போம்..
குலதெய்வம் ஆறுமுகம்..
எங்களுக்கு எப்போதும் ஏறுமுகம்..
வேண்டிக்கிடவா..வெற்றி தரவா..
வேண்டிக்கிடவா..வெற்றி தரவா..
நானே இந்திரன் நானே சந்திரன் பொறந்த ஊருக்குள்ள..
சூரியன போல் சுத்தி வருவேன்..
பாதி நல்லவன் மீதி வல்லவன் மோத வந்தவன..
எட்டி மிதிப்பேன் முட்டி உடைப்பேன்..
.....................
Songs lyrics from Singam 1 movie:
