CHELLA KILIYO
செல்லக்கிளியோ
Movie: Chellame
Singers: Ranjith, Anuradha sriram
Music director: Harris jayaraj
பெண்: செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே..
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே..
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே..
ஆண்: ஏ ஒத்தை கிளியே என் மெத்தை கிளியே..
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே..
ஏ ஒத்தை கிளியே என் மெத்தை கிளியே..
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு விடியும் முன்னே கூட்டி செல்வேன்..
பெண்: செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே..
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே..
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே..
பெண்: ஆ திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்..
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்..
மறத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்..
ஆண்: நம்ம கட்டில் சூடு..ஓய் ஓய்..
இப்போ ஆறி போச்சு..ஓய் ஓய்..
நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோமா..
பெண்: என் சோகம் போக..ஓய் ஓய்..
என் மோகம் தீர.. ஓய் ஓய்..
அட ரெட்டை சேவை செய்ய போகும் கெட்டிக்காரா கிட்ட வா வா..
ஆண்: செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே..
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே..
பெண்: என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே..
பெண்: ஒட்டி கொண்டு ஒட்டி கொண்டு உருகி போவோம்..
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்..
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்..
ஆண்: இனி ஒவ்வொரு இரவும்..ம்ம்..
முதல் இரவாய் செய்வோம்..ம்ம்..
அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம்..
பெண்: இரு நதிகள் போலே நாம் தழுவி கொள்வோம்..
நாம் தழுவும் போது சிதறும் துளியில் விண்மீன் எல்லாம் மறைய செய்வோம்..
பெண்: செல்லக்கிளியோ செல்லக்கிளியோ புதருக்குள்ளே..
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே..
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே..
ஆண்: ஓ ஓ ஒத்தை கிளியே என் மெத்தை கிளியே..
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாதே..
ஏ ஒத்தை கிளியே என் மெத்தை கிளியே..
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு விடியும் முன்னே கூட்டி செல்வேன்..
........................
Songs lyrics from Chellamey movie:
