AARIYA UDHADUGAL

 ஆரிய உதடுகள்



Movie: Chellame

Singers: Hariharan, Swarnalatha

Music director: Harris jayaraj 


ஆண்: ஆரிய உதடுகள் உன்னது..
திராவிட உதடுகள் என்னது..
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ..
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..

பெண்: ஆரிய உதடுகள் என்னது..
திராவிட உதடுகள் உன்னது..
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ..
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..

ஆண்: இதில் யார் தோல்வியுறும் போதும்..
அது தான் வெற்றி என்றாகும்..
இதில் நீ வெற்றி பெற வேண்டும்..
மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்..

ஆரிய உதடுகள் உன்னது..
திராவிட உதடுகள் என்னது..
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ..
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..

பெண்: எத்தனை உள்ளது பெண்ணில்..
அட எது மிக பிடித்தது என்னில்..
பகல் பொழுதின் பேரழகா..
ராத்திரியின் பூரணமா..
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா..
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா..

ஆண்: ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்..
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்..
மோகம் வரும் தருணங்களில் முனகல் இடும் ஒலி பிடிக்கும்..
கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னே பின்னே..
கலையாத கொலுசு ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்..

பெண்: என் நாயகா எனை பிரிகையில் என் ஞாபகம் தலை காட்டுமா..
உன் ஆண் மனம்..ம்ம்ம்.. தடுமாறுமா...
பிற பெண்கள் மேல் மனம் போகுமா..

ஆண்: ஏ கண்களே நீயாய் போனால் வேறு பார்வை வருமா..

பெண்: ஆரிய உதடுகள் என்னது..
திராவிட உதடுகள் உன்னது..
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..ஏ..

ஆண்: ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..

ஆண்: தேவதை புன்னகை செய்தால் சிறு தேய்பிறை முழுநிலவாகும்..
குறை குடமாய் நான் இருந்தேன்..
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்..
ஊனோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்..
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்..

பெண்: ஜீவித நதியென விரைந்தாய்..
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்..
பிறவியிலே தாய் கொடுத்தாய்..
பிறந்த பயன் நீ கொடுத்தாய்..
ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான்..
பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான்..

ஆண்: அடி காற்றினால் வான் நிறையுது..
நம் காதலால் உயிர் நிறையுது..
வளர் ஜோதியே எந்தன் பாதியே..
நீ என்ன தான் எதிர்பார்க்கிறாய்..

பெண்: ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா..

ஆண்: ஆரிய உதடுகள் உன்னது..

பெண்: திராவிட உதடுகள் உன்னது..

ஆண்: ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே..

பெண்: ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே..

ஆண்: இதில் யார் தோல்வியுறும் போதும்..
அது தான் வெற்றி என்றாகும்..
இதில் நீ வெற்றி பெற வேண்டும்..

ஆ&பெ: மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்..