VAAJI VAAJI VAAJI

 வாஜி வாஜி வாஜி



Movie: Sivaji

Singers: hariharan, Madhusree

Music director: A.R.Rahman


பெண்: ஆம்பல் ஆம்பல்..
மவ்வல் மவ்வல்..
ஆம்பல் ஆம்பல்..
மவ்வல் மவ்வல்..

ஆண்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்..
புன்னகையோ மவ்வல் மவ்வல்..
உன் பூவிழி பார்வை போதுமடி..
என் பூங்கா இலைகளும் மலருமடி..
உன் கால் கொலுசொலிகள் போதுமடி..
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..

பெண்: வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..
வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..
அன்பா வாளை எடு..
அழகை சாணை எடு..
உன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு..

ஆண்: அடி நெட்டை நிலவே ரெட்டை திமிரே..
நெஞ்சில் முட்டி கொல்லு..

பெண்: வஹஜி வஹஜி வஹஜி என் ஜீவனே சிவாஜி..
வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..

ஆண்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்..
புன்னகையோ மவ்வல் மவ்வல்..

ஆண்: ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்..
என் தேன் நிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள் தான்..
 
பெண்: புன்னகை பேரரசே தேன் குளத்து பூவுக்குள் குளிப்பீரா..
ஆ..ஆ..புன்னகை பேரரசே தேன் குளத்து பூவுக்குள் குளிப்பீரா..
விடியும் வரை மார்புக்குள் இருப்பீரா..
விழிகளுக்குள் சிறு துயில் கொள்வீரா..

ஆண்: ஓ..பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்..
செயல் புயல் நானடி..

பெண்: வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..
வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..

ஆண்: பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்..
புன்னகையோ மவ்வல் மவ்வல்..

ஆண்: பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்..
வந்து ஒளிந்து கொண்டேன் சுகம் சுகம் கண்டேன்..

பெண்: ஆனந்த வெளியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்..
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி வெண்ணிலவை தகதியும் ஆக்கிவிட்டேன்..

ஆண்: அடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்..
முரண்பாட்டு மூட்டை நீ..

பெண்: வாஜி...வா வா வா வா..வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..
வாஜி வாஜி வாஜி என் ஜீவனே சிவாஜி..

ஆண்: ஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்..
புன்னகையோ மவ்வல் மவ்வல்..
உன் பூவிழி பார்வை போதுமடி..
என் பூங்கா இலைகளும் மலருமடி..
உன் கால் கொலுசொலிகள் போதுமடி..
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி..

பெண்: ஆம்பல் ஆம்பல்..
மவ்வல் மவ்வல்..
ஆம்பல் ஆம்பல்..
மவ்வல் மவ்வல்..