BALLELAKKA BALLELAKKA

பல்லே லக்கா

Movie: Sivaji

Singers: S.P.Balasubramaniam, Benny dayal, A.R.Rihana

Music director: A.R.Rahman

பெண்:  சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டுனு சொல்லு..
சேர பாண்டிய சூரனும் இவனா சொல்லு சொல்லு சட்டுனு சொல்லு..
சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டுனு சொல்லு..
சேர பாண்டிய சூரனும் மெய்   சொல்லு சொல்லு சட்டுனு சொல்லு..
பாரடி பாரடி யாரடி இவனோ..
பாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ..
கூறடி கூறடி யாரடி இவனோ..
கெட்டதை பட்டென சுட்டிடும் சிவனோ..

ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா..
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா..

காவிரியாறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா...
ஓ..தாவணி பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா..
நம்ம களத்து மேடு..ஆஆ..ஆ.ஆ..
கம்மா கர கரிச காடு..ஓ..ஓ..ஓ..ஓ..
செம்மண் அள்ளி தெறிக்கும் ரோடு..ம்..ம்..
ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி..
படு படு படுவென போர்த்திய புல்வெளி..
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி..
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்டிலி..
தட தட  தடவென அதிர்கிற ரயிலடி..
கட கட  கடவென கடக்கிற காவிரி..
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை..
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்..
மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்  மெய் மெய் மெய் மெய் மெய்..

சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டுனு சொல்லு..
சேர பாண்டிய சூரனும் இவனா சொல்லு சொல்லு சட்டுனு சொல்லு..
சூரியனோ சந்திரனோ யாரிவனோ சட்டுனு சொல்லு..
சேர பாண்டிய சூரனும் இவனா சொல்லு சொல்லு சட்டுனு சொல்லு..

 பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா..
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா..

சட்டென சொல்லு.. சட்டென சொல்லு..

ஏலேலே கிராமத்து குடிசையில கொஞ்சம் காலம் தங்கி பாருலே..ஏலே ஏலே ஏலே..
கூரையின் ஓட்டை விரிசல் வழி நட்சத்திரம் எண்ணி பாருலே..
ஏலே ஏலே ஏலே..
கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அணைத்து 
கொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்..
வெறும் காலில் செருப்பின்றி நடந்து மண்ணோடு பேசி கொண்டு போவோம் மழலைகள் ஆவோம்..

பெண்: ஆலமரத்துக்கு ஜடைய பின்னி தான் பூக்கள் வைக்கலாமே..

ஆண்:  ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான் பென்சில் சீவலாமே..

ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா..
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா..

ஏ காவிரியாறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா...
ஓ..தாவணி பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா..

சட்டென சொல்லு.. 

ஆண்: ஏலே ஏலே அஞ்சறை பெட்டியிலே ஆத்தாவோட ருசி இருக்கும்.. ஏலே ஏலே ஏலே..
அம்மியில் அரைச்சு ஆக்கி வச்ச நாட்டுக்கோழி பட்டை கிளப்பும்.. ஏலே ஏலே ஏலே..
ஏலே ஆடு மாடு மேல உள்ள பாசம் 
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்..
வெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம் வெள்ளந்தி மனிதர்கள் வாசம் மண்ணு எங்கும் வீசும்..

பெண்: பாம்பர கிழவியின் பச்சிலை மருந்துக்கு பேயும் ஓடி போகும்..

ஆண்: பங்காளி பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்..

ஏ பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா திருச்சிக்கா திருத்தணிக்கா..
ஏ பல்லே லக்கா பல்லே லக்கா ஒட்டு மொத்த மக்களுக்கா அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா..

காவிரியாறும் கை குத்தல் அரிசியும் மறந்து போகுமா...மறந்து போகுமா...
ஓ..தாவணி பெண்களும் தூது விடும் கண்களும் தொலைந்து போகுமா..

பெண்: நம்ம களத்து மேடு..

ஆண்: கம்மா கர கரிச காடு..

 பெண்: செம்மண் அள்ளி தெறிக்கும் ரோடு..

ஆண்: ஏ சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி..
படு படு படுவென போர்த்திய புல்வெளி..
தொட தொட தொட தொட உடைகிற பனித்துளி..
சுட சுட சுட சுட கிடைக்கிற இட்டிலி..
தட தட தட தடவென அதிர்கிற ரயிலடி..
கட கட கட கடவென கடக்கிற காவிரி..
விறு விறு விறுவென மடிக்கிற வெற்றிலை..
முறு முறு முறுவென முறுக்கிய மீசைகள்..
மனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய் மெய்   மெய் மெய் மெய் மெய் மெய் மெய்..