SIVA SIVAYA POTRIYE

 சிவா சிவாய போற்றியே




Movie: Bahubali 1 : the beginning

Singers: M.M.Keeravani, Vaikom vijayalakshmi

Music director: M.M. Keeravani


சிவா சிவாய போற்றியே..
நமச்சிவாய போற்றியே..
பிறப்பறுக்கும் ஏகனே..
பொறுத்தருள் அநேகனே..
பரம்பொருள் உன் நாமத்தை..
கரம் குவித்து பாடினோம்..
இறப்பிலி உன் கால்களை சிரம் குவித்து தேடினோம்..

யாரு இவன் யாரு இவன் கல்ல தூக்கி போறானே..
புள்ள போல தோளு மேல உன்ன தூக்கி போறானே..
கண்ணு ரெண்டு போதல..
கையு காலு ஓடல..
கங்கைய தான் தேடிக்கிட்டு 
தன்ன தானே சுமந்துகிட்டு லிங்கம் நடந்து போகுதே..

எல்லையில்லாத ஆதியே..
எல்லாம் உணர்ந்த சோதியே..
மலைமகள் உன் பாதியே..
கலைமகள் உன் கைதியே..
அருள்வல்லான் எம் அற்புதன்..
அரும்பொருள் எம் அர்ச்சிதன்..
உமை விரும்பும் உத்தமன்..
உருவிலா எம் ருத்திரன்..

ஒளிர்விடும் எம் தேசனே..
குளிர் மலை தன் வாசனே..
எழில்மிகு எம் நேசனே..
அழித்தொழிக்கும் ஈசனே..
நில்லாமல் ஆடும் பந்தமே..
கல்லாகி நிற்கும் உந்தமே..
கல்லா எங்கட்கு சொந்தமே..
எல்லா உயிர்க்கும் அந்தமே..





......................





Songs lyrics from bahubali 1 the beginning tamil :