PACHAI THEE NEEYADA
பச்சை தீ நீயடா
Movie: Bahubali 1 : the beginning
Singers: Karthik, Damini bhatla
Music director: M.M. Keeravani
பெண்: பச்சை தீ நீயடா..
கச்சை பூ நானடா..
ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா..
வெற்று கல் நானடா..
வெட்டும் உளி நீயடா..
அற்ப பாறை என்னில் சிற்பம் செய்தாயடா..
ஆண்: நீயே மண் மின்னும் வெண்தாரகை..
உள்ளங்கை சேர்ந்த பூந்தாரிகை..
கைகள் நாம் சேர்க்க சிறகாகுமே..
புது வானங்கள் உருவாகுமே..
பெண்: பச்சை தீ நீயடா..
கச்சை பூ நானடா..
ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா..
ஆண்: மான்விழிக்குள் எந்தன் வாள் ஒன்றை காண..
மாமலை ஒன்றேறி வந்தேனடி..
பெண்: இதயம் ஒன்று உள்ளதென்று..
உன் அழைப்பாலே கண்டேனே..
இன்னும் எனை இறுக்கி அணைத்திட துடித்தேனே..
ஆண்: நீயே மண் மின்னும் வெண்தாரகை..
தோளில் வீழ்கின்ற பூந்தாரிகை..
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்..
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்..
பெண்: பச்சை தீ நீயடா..
கச்சை பூ நானடா..
ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா..
ஆண்: கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால்..
மோதலின் மோகங்கள் கேட்டாயடி..
பெண்: பிறவி பல எடுத்தாலும்..
நிகழும் கணம் நான் மறவேனே..
வலிகளை வரமென தந்திட கேட்டேனே..
ஆண்: நீயே மண் மின்னும் வெண்தாரகை..
கண்ணில் தேன் சிந்தும் பூந்தாரிகை..
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்..
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்..
பெண்: பச்சை தீ நீயடா..
கச்சை பூ நானடா..
ஒற்றை பார்வை கொண்டே பற்றி கொண்டாயடா..
வெற்று கல் நானடா..
வெட்டும் உளி நீயடா..
அற்ப பாறை என்னில் சிற்பம் செய்தாயடா..
......................
Songs lyrics from bahubali 1 the beginning tamil :
