MANOGARI

 மனோகரி



Movie: Bahubali 1 : the beginning

Singers: Haricharan, mohana bhogaraju

Music director: M.M. Keeravani


பெண்: உருக்கியோ நட்சத்திர தூரல் தூரல்..
கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல்..
பொறுக்கி மினுக்கி செதுக்கி பதித்த மூரல் மூரல்..
நெருக்கி இறுக்கி செறுக்கை எரிக்கும் ஆரல் ஆரல்..

ஆண்: மனோகரி...மனோகரி..
கள்ளன் நானோ உன்னை அள்ள மெல்ல மெல்ல வந்தேன்..
எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்..
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள..
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்..
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல் தேடல்..

பெண்: உருக்கியோ நட்சத்திர தூரல் தூரல்..
கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல்..

பெண்: மேகத்துண்டை வெட்டி கூந்தல் படைத்தானோ..

ஆண்: வேறு..என் தேடல் வேறு..

பெண்: காந்தள் பூவை கிள்ளி கைவிரல் செய்தானோ..

பெண்: ஆழி கண்ட வெண்சங்கில் அவன் அனல் ஒன்றை செய்தானோ..
யாழி இரண்டை பூட்டி அவன் தனம் ரெண்டை செய்தானோ..
வழங்கிடவா..

ஆண்: ஆ...மனோகரி...மனோகரி..
பூவை விட்டு பூவில் தாவி தேனை உண்ணும் வண்டாய்
பாகம் விட்டு பாகம் தாவினேன்..

ஆண்: ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல் தேடல்..

பெண்: உருக்கியோ நட்சத்திர தூரல் தூரல்..
கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல்..