IRUL KONDA VAANIL

 இருள் கொண்ட வானில்




Movie: Bahubali 1 : the beginning

Singers: Deepika

Music director: M.M. Keeravani


இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி..
இவள் மடி கூட்டில் முளைக்கும் பாகுபலி..
கடையும் இந்த பாற்கடலில் நஞ்சார் அமுதார் மொழி..

வான் விட்டு மகிழ்மதி வாழ்ந்திடவே வந்த சூரியன் பாகுபலி..
மாலைகள் மகுடங்கள் சூடிடுவான் எங்கள் நாயகன் பாகுபலி..

கடையும் இந்த பாற்கடலில் நஞ்சார் அமுதார் மொழி..

அம்பென்றும் குறி மாறியதில்லை..
வாள் என்றும் பசியாறியதில்லை..
முடிவென்றும் பின் வாங்கியதில்லை..
தானே சேனை ஆவான்..
தாயே இவன் தெய்வம் என்பான்..
தமையன் இவன் தோழன் என்பான்..
ஊரே தன் சொந்தம் என்பான்..
தானே தேசம் ஆவான்..

சாசனம் எது சிவகாமி சொல் அது..
விழி ஒன்றில் இத்தேசம் விழி ஒன்றில் பாசம் கொண்டே..

கடையும் இந்த பாற்கடலில் நஞ்சார் அமுதார் மொழி..