KADHAL VANDHUM SOLLAMAL
காதல் வந்தும் சொல்லாமல்
Movie: Saravana
Singers: V.V.Prasanna, Saindhavi
Music director: Srikanth deva
ஆண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே..
சொல்லாமல் செல்லாதே..
பெண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ..
உன் காதல் சொல்வாயோ..
ஆண்: இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பல துளி..
நீ சென்றால் கூட காதல் சுகமாகும்..
பெண்: நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்..
ஆண்: வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு..
பூமி பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு..
பெண்: விதியின் கைகளோ வானம் போன்றது..
புரியும் முன்னமே மனம் சாம்பல் ஆகுது..
பெண்: நினைவு இடறி மண்ணில் விழுகிறதே..
நிழலில் கரைந்து அது சாகாதா..
காதல் கதறி இங்கு அழுகிறதே..
இரண்டு கண்ணும் அதில் கருகாதா..
ஆண்: ஏன்தான் காதல் வளர்த்தேன்..
அதை ஏனோ என்னுள் புதைத்தேன்..
சுடர் இல்லாத தீயில் எரிகின்றேன்..
சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்..
பெண்ணே உன் பாதையில்..
நகரும் மரமாகுவேன் ..
ஓஓ..இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி ஓஓ..
இதயம் கொண்டு போனால் என்னடி..
பெண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ..
உன் காதல் சொல்வாயோ..
ஆண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை கொல்லாதே..
சொல்லாமல் செல்லாதே..
ஓ காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னைக் கொல்வாயோ..
உன் காதல் சொல்வாயோ..
இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பல துளி..
நீ சென்றால் கூட காதல் சுகமாகும்..
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்..
வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு..
பூமி பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு..
பெண்: விதியின் கைகளோ வானம் போன்றது..
புரியும் முன்னமே மனம் சாம்பல் ஆகுது..
.......................
Songs lyrics from Saravana movie:
