KADHAL SUTHUDHE
காதல் சுத்துதே
Movie: Saravana
Singers: Naresh iyer, Sadhana sargham
Music director: Srikanth deva
ஆண்: காதல் சுத்துதே என்னை சுத்துதே..
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே..
ஓஓஓ..காதல் சுத்துதே என்னை சுத்துதே..
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே..
இரவை நிலா சுத்துதே..
இதயம் ஊர் சுத்துதே..
தெய்வம் கோவில் சுத்துதே..
உன்னாலே தலை மேல் பூமி சுத்துதே..
பெண்ணே நீ..
பெண்ணே நீ..
பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே..
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே..
காதல் சுத்துதே என்னை சுத்துதே..
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே..
இரவை நிலா சுத்துதே..
இதயம் ஊர் சுத்துதே..சுத்துதே..
ஆண்: மௌனமாய் உன்னை நானே மனப்பாடம் செய்கின்றேன்..
பெண்: தீண்டலில் இன்பம் கண்டு திண்டாடி துடிக்கின்றேன்..
ஆண்: புத்தகம் நடுவே புகைப்படம் நீ..
பெண்: வாரத்தில் ஏழு நாள் விடுமுறை நீ..
ஆண்: இன்னொரு வானமாய் இருப்போமா..
பெண்: பூமியைத் தாண்டி நாம் பறப்போமா..
தார தாரரா தார தாரரா தாரா தாரரா தாரரா
பெண்: முத்தத்தை கடனாய் கேட்கும் முதலாளி இவன் தானோ..
ஆண்: வெட்கத்தை மறந்து வந்த விருந்தாளி இவள் தானோ..
பெண்: வாலிப உடலில் வசிக்கின்றேன்..
ஆண்: புன்னகை முகத்தை ரசிக்கின்றேன்..
பெண்: காதலின் எல்லைக்குள் பறக்கின்றேன்
ஆண்: மீண்டும் நான் இன்றே பிறக்கின்றேன்..
பெண்: பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே..
ஆண்: ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுற்றுதே..
பெண்: ஆஆஆ..காதல் சுத்துதே என்னை சுத்துதே..
கண்கள் சுத்துதே உன்னை சுத்துதே..
என் இரவை நிலா சுத்துதே..
இதயம் ஊர் சுத்துதே..
தெய்வம் கோவில் சுத்துதே..
உன்னாலே தலை மேல் பூமி சுத்துதே..
அன்பே நீ..
அன்பே நீ..
ஆண்: பெண்ணே நீ பார்க்கும் பார்வையில் பேசும் வார்த்தையில் வானம் மண்ணில் சுத்துதே..
ஐயோ ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால் ஏனோ தலை சுத்துதே..
.......................
Songs lyrics from Saravana movie:
