ASKU LASKA

 அஸ்கு லஸ்கா



Movie: Nanban

Singers: Vijay prakash, Chinmayi, Suvi

music director: Harris jayaraj 


பெண்: ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே..
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே..

அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் 
அஸ்க் அஸ்க் அஸ்க்   லஸ்கா அஸ்க்  

ஆண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த்து அஸ்த்து லீபே 
அ ஹாவ போலிங்கு சிந்தா சிந்தா இஷ்க்கு இஷ்க்கு மீலே
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

அஸ்க் அஸ்க் அஸ்க்  லஸ்கா அஸ்க் அஸ்க் ..

ஆண்: அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்..
மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டொன்று செய்தேன்..
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்.‌.
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே..
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே..

ஆ அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த்து அஸ்த்து லீபே 
அ ஹாவ போலிங்கு சிந்தா சிந்தா இஷ்க்கு இஷ்க்கு மீலே
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ஆண்: புளூட்டோவில் உனை நான் கூடேற்றுவேன்..
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்..
முக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே..
மெல்லிடையோடு வளைகோடு நானாகிறேன்..ஓ..

பெண்: ம்..பிளாட்டோவின் மகனாய் உன் வேடமா..
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா..
பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன்..
உன் நெஞ்சில் நாடி மானி வைக்க காதல் காதல் என்றே கேட்க..

பெண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஏ அஸ்த்து அஸ்த்து லீபே 
அ ஹாவ போலிங்கு சிந்தா சிந்தா இஷ்க்கு இஷ்க்கு மைலே..

ஆண்: லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ..
ஒரு காதல் உந்தன் மேலே..

அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க் 
அஸ்க் அஸ்க் அஸ்க் லஸ்கா அஸ்க்  

பெண்: தேஜாவு கனவில் தீமூட்டினாய்..
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்..
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்..
இரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய்..
வெண்நிலவாக இதமாக குளிரூட்டவா..

ஆண்: கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்..
வெண் வண்ண நிழலை மண் வீசினாய்..
புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை..
வைரஸ் இல்லா கனி நீ உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெள்ளும் சொல்லை போலே..

ஆண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த்து அஸ்த்து லீபே 

பெண்: அ ஹாவ போலிங்கு சிந்தா சிந்தா இஷ்க்கு இஷ்க்கு மைலே

ஆண்: லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

பெண்: ஓ அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்..

ஆண்: மொத்தமாய் கோர்த்து தான் காதல் செண்டொன்று செய்தேன்..

ஆ&பெ: உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்.‌.

ஆண்: ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே..
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே..