THOM KARUVIL IRUNDHOM
தோம் கருவில் இருந்தோம்
Movie: Star
Singers: Shankar mahadevan
Music director: A.R.Rahman
தோம் கருவில் இருந்தோம்..
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்..
தோம் தரையில் விழுந்தோம்..
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்..
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே..
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே..
தோம் கருவில் இருந்தோம்..
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்..
தோம் தரையில் விழுந்தோம்..
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்..
கருவில் இருந்தோம்..
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்..
அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே..
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே..
தண்ணீரில் வாழ்கின்றோம் நாம் கூட மச்சாவதாரம் தான்..
தோம் கருவில் இருந்தோம்..
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்..
அலைகளை அலைகளை பிடித்து கொண்டு..
கரைகளை அடைந்தவர் யாருமில்லை..
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு..
சௌக்கியம் அடைவது நியாயமில்லை..
கவலைக்கு மருந்து இந்த ராஜதவம்..
கண்ணீர் கூட போதையின் மறுவடிவம்..
வழி எது வாழ்க்கை எது விளங்கவில்லை..
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை..
கையில் கோப்பை இல்லை என்றால்..
கற்பனை வரைவது நின்றுவிடும்..
கனவுகள் மட்டும் இல்லை என்றால்..
கவலைகள் நம் உயிர் தின்றுவிடும்..
தோம் கருவில் இருந்தோம்..
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்..
தோம் தரையில் விழுந்தோம்..
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்..
அப்போது அப்போது போன தூக்கம் நம் கண்களிலே..
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே..
ஜனனம் என்பது ஒரு கரைதான்..
மரணம் என்பது மறு கரைதான்..
இரண்டுக்கும் நடுவே ஓடுவது தலைவிதி என்னும் ஒரு நதி தான்..
வாழ்க்கையின் பிடிமானம் ஏதுமில்லை..
இந்த கிண்ணம் தானே பிடிமானம் வேறு இல்லை..
திராட்சை தின்பவன் புத்திசாலியா..
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா..
பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது..ஆ..
மண்ணுக்குள் முடிகிறதே..ஆ..
விஷயம் தெரிந்தும் மனித இனம்..ஆ..
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே..ஆ..
தோம் கருவில் இருந்தோம்..
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்..
தோம் தரையில் விழுந்தோம்..
விழுந்தவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்..
அப்போது அப்போது போன தூக்கம் என் கண்களிலே..
எப்போது எப்போது வந்து சேரும் விடை தோணலையே..
............................
Songs lyrics from star movie:
