ADI NENDHUKITTEN
அடி நேந்துகிட்டேன்
Movie: Star
Singers: Karthik, Chithra sivaraman
Music director: A.R.Rahman
ஆண்: அடி நேந்திக்கிட்டேன் நேந்திக்கிட்டேன் நெய் விளக்கு ஏத்தி வெச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க..
நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க..
பூன போல வீட்டுக்குள்ள வந்துவிடுவேன்..
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்..
பெண்: வந்திடாதே சத்தம் போட்டு கத்திபுடுவேன்..
கன்னத்துல தேள போல கொட்டிவிடுவேன்..
ஆண்: ரோசாப்பூ இடுப்புல வண்டு போல சுத்தி வந்து சுத்தி வந்து தேன எடுப்பேன்..
பெண்: ஊருசனம் அத்தனையும் கூட்டி வந்து உன்னுடைய கள்ளத்தனம் காட்டிபுடுவேன்..
ஆச தோச ஏஏ ஏஏ..
நீ பேசும் பாஷையே புரியலையே..
ஆச தோச ஏஏ ஏஏ..
நீ பேசும் பாஷையே புரியலையே..
ஆண்: வெப்பம் தணிப்பதற்கு வெளஞ்சிருக்கும்
வெள்ளரியே வெள்ளரியே
கழுத்து வளைவில் என்ன சரிய விட்டு
தள்ளுறியே தள்ளுறியே தள்ளுறியே..
பெண்: காதல் போதை உன் கையில் மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே இப்ப மாமா..
பொண்ணு இளமனச புளியம் பழம் போல உலுக்க பார்க்காதே ஆமா..
ஆண்: சாரல் அடிக்குதடி..
அடி உன் அழக சொக்க பானம் போல
கிட்ட நீ வாடி கொஞ்சம் குளிர் காய வேணும்..
பெண்: ஆச தோச ஏஏ ஏஏ..
நீ பேசும் பாஷையே புரியலையே..
ஆச தோச ஏஏ ஏஏ..
நீ பேசும் பாஷையே புரியலையே..
ஆண்: கூந்தல் அருவியில சரிவுகளில் கொட்டுதடி கொட்டுதடி
கன்னம் குழியில் மனம் பரிசலை போல் சுத்துதடி சுத்துதடி சுத்துதடி..
பெண்: குறும்பு பேச்சால கொக்கு தல மேல வெண்ண வைக்காத மாமா..
மூக்கு செவக்காத முந்திரி பழம் என்ன நாக்கு செவக்க வைக்கலாமா..
ஆண்: எளம பசிக்குதடி..
ருசி காட்டிபுட்டு எல போட்டுபுட்டு தண்ணி தெளிச்சு புட்டு
காக்க வைக்கிறியே ஏம்மா..
ஆண்: அடி நேந்திக்கிட்டேன் நேந்திக்கிட்டேன் நெய் விளக்க ஏத்தி வெச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க..
நேத்திகடன் தீர்க்கலேனா கோச்சுக்குமே சாமி எல்லாம்
பக்கத்தில் நீ வாடி அள்ளி கொடுக்க..
பூன போல வீட்டுக்குள்ள வந்துவிடுவேன்..
புன்னகையில் நீ சிந்தும் பால குடிப்பேன்..
பெண்: வந்திடாதே சத்தம் போட்டு கத்திபுடுவேன்
கன்னத்துல தேள போல கொட்டிவிடுவேன்..
ஆண்: ரோசாப்பூ இடுப்புல வண்டு போல சுத்தி வந்து சுத்தி வந்து தேன எடுப்பேன்..
பெண்: ஊருசனம் அத்தனையும் கூட்டி வந்து உன்னுடைய கள்ளத்தனம் காட்டிபுடுவேன்..
ஆச தோச ஏஏ ஏஏ..
நீ பேசும் பாஷையே புரியலையே..
............................
Songs lyrics from star movie:
