MANASUKKUL ORU PUYAL

 மனசுக்குள் ஒரு புயல்




Movie: Star

Singers: S.P.Balasubramaniam, Sadhana sargham 

Music director: A.R.Rahman 


பெண்: மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன..
புயலுக்கு காதல் என்று பேர் சொல்கின்றாய்
அடுத்த நிலை தான் என்ன..
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும்..
என்னென்ன ஆகும்..
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்..
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்..

ஆண்: மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன..
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும்..

பெண்: மூச்சு விடவும் மறந்து விட்டேன்..
மூச்சு விடவும் மறந்து விட்டேன்..
எனக்கென்று பெயரில்லை அன்பே என் உடலில்லை இங்கே என் உயிரில்லை உயிரே..
என்ன புதுமை அட தூக்கம் என் இட கண்ணில்  கனா என் வல கண்ணில் நிஜமா..

ஆண்: மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று..
முக்தி பெற்று திரும்புதல் போல..
உன் மடியில் சொல்லால் விழுந்தவன் கவியாய் முளைத்தேன் உன் பொன்மடி வாழ்க..

ஆ&பெ: நம் மெய் காதல் வாழ்க..
நம் மெய் காதல் வாழ்க..
நம் மெய் காதல் வாழ்க..
நம் மெய் காதல் வாழ்க..

பெண்: மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன..
இந்த புயல் இன்று கரை கடந்தால் இன்னும் என்னென்ன ஆகும்..

ஆண்: மேற்கில் போன பறவை ஒன்று..
மேற்கில் போன பறவை ஒன்று..
மே மாதத்தில் எனக்கொரு கன்னி பெண் வருமென்று காதில் பண் பாடி விட்டு சென்றது..
என்ன வியப்பு அந்த பாடல்  பண் தேயும் முன்னே கண்ணே என் கண்கள் உன்னை கண்டது..

பெண்: பருவத்திலே ஒரு முறை பூத்தேன்..
பார்த்ததிலே மறுமுறை பார்த்தேன்..
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு  குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும்..

பெண்: நம் மெய் காதல் வாழ்க..
ஆண்: நம் மெய் காதல் வாழ்க..
பெண்: நம் மெய் காதல் வாழ்க..
ஆண்: நம் மெய் காதல் வாழ்க..
ஆ&பெ: நம் மெய் காதல் வாழ்க..
நம் மெய் காதல் வாழ்க..