VEERAMULLA
வீரமுள்ள
Movie: Kaalai
Singers: Sriram,Manika vinayagam, sirkazhi chidambaram
Music director: G.V.Prakash kumar
கருப்பசாமி கருப்பசாமி.. எங்க குல கருப்பசாமி..
உசிலம்பட்டி வடுகபட்டி ஆண்டிபட்டி வாடிப்பட்டி
ஊரை எல்லாம் காத்து நிற்கும் தெய்வம் கருப்பசாமி..
வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்..
எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்..
தெக்கு காத்த கேளு
அந்த தென்னங்கீத்த கேளு
சோள காட்ட கேளு
அவ சேதி சொல்லுமே
அச்சமிங்கு இல்ல
அதில் மிச்சம் ஏதும் இல்ல
கச்ச கட்டி இன்று புகழ் உச்சம் ஏறி நிற்கும் தானே
குடுப்போம் கல் இழுப்போம் அவ விதைச்சா நாம முளைச்சோம்
அவ இல்லா விட்டா நாம இல்லடா ஓ..ஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓ..
வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்..
எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்..
வரம் கொடுக்கும் சாமி சத்தியம்
வயல் இருக்கும் பூமி சத்தியம்
உரம் கொடுத்து தூக்கி விட்டது எவடா
அடுக்கடுக்கா தூத்த பட்டவ
அடிதடிய தீர்த்தபட்டவ
கவலை எல்லாம் சுத்த பட்டவ இவடா
மருதுபாண்டி ஆட்டம் புகழ் மங்கிடாத கூட்டம்
உறவு காத்து இங்கே என்றும் வாழ்ந்து காட்டுவோம்..
சின்ன கருப்பு சாட்சி அந்த பெரிய கருப்பு சாட்சி
கோப தாபம் விட்டு அன்பு பாசம் காட்டுவோம்..ஓ..ஓ.. ஓ.. ஓ.. ஓ..ஓ..
வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்..
எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்..
குமளிமல காத்து வந்தது
குலவ சத்தம் கேட்டு வந்தது
குதி நடையை போட்டு வந்தது எதுக்கு
திருப்பாச்சி எடுத்த கையில
திருக்குறள எடுக்க வச்சவ
கருப்பாயி கால தொடணும் அதுக்கு
தேவர் குல மானு அவ சுருளி மல தேனு
வைகை ஆத்து மீனு
அவ தெய்வ காட்சி தான்
உண்மையாக சொன்னா அவ எதுக்க வந்து நின்னா
வெள்ளையன தின்ன அந்த வேலுநாச்சி தான்
வீரமுள்ள ஈரமுள்ள ரோசமுள்ள பாசமுள்ள
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் எங்க வம்சம்..
எக்குலமும் ஏத்தி நிக்கும் முக்குலத்த காத்து நிக்கும்
கருப்பாயி ஆத்தாவோட வம்சம் இந்த வம்சம்..
........................
Songs lyrics from Kaalai movie:
