EPPO NEE ENNA PAAPA

 எப்போ நீ என்ன பாப்ப




Movie: Kaalai

Singers: Madhusree 

Music director: G.V.Prakash kumar 


எப்ப நீ என்ன பாப்ப..
எப்ப என் பேச்ச கேப்ப..
எப்ப நான் பேச கெட்ட பையா..
எப்போடா கோபம் குறையும்..
எப்போடா பாசம் தெரியும்..
எப்ப நான் பேச கெட்ட பையா..

எப்ப நீ என்ன பாப்ப..
எப்ப என் பேச்ச கேப்ப..
எப்ப நான் பேச கெட்ட பையா..
எப்போடா கோபம் குறையும்..
எப்போடா பாசம் தெரியும்..
எப்ப நான் பேச கெட்ட பையா..
நிழலாக உந்தன் பின்னால் நடமாடுறேன்..
நிஜமாக உந்தன் முன்னால் தடுமாறுறேன்..
ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே வால் ஆட்டுறேன்..
உன் செயலை எல்லாம் தூரம் நின்னு பாராட்டுறேன்..
என்னை ஒருமுறை நீயும் திரும்பி பார்ப்பாயா..
ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...
ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...

கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால்..
காலம் முழுவதும் வருவனே..
உந்தன் பாதையில் பயம் இல்லை நீ வா..
மலையை சுமக்கிற பலம் உனக்கு..
மலரை ரசிக்கிற மனம் உனக்கு..
இனிமேல் எப்போதும் நீ எனக்கு நீ வா..
உன் துணை தேடி நான் வந்தேன் துரத்தாதேடா..
உன் கோபம் கூட நியாயம் என்று ரசித்தேனேடா..
நீ தீயாய் இரு எனை திரியாய் தொடு..
நான் ஒளி பெற்றே வாழ்வேனேடா..
அட என்னை தவிர எல்லா பேரும் ஆணாய் ஆனாலும்..
நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன் 
என்ன ஆனாலும்..
நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா..

எரிமலை கண்கள் ரெண்டு..
பனிமலை இதயம் ஒன்று..
உன்னிடம் கண்டேன் கெட்ட பையா..
பூமியில் ஆம்பளை என்று..
உன்னை தான் சொல்வேன் இன்று..
வேறென்ன சொல்ல கெட்டப்பையா..
உன்னாலே அச்சம் இன்றி நான் வாழுறேன்..
உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்..
இந்த பூமி பந்தை தாண்டி போக முடியாதுடா..
உன் அருகில் நின்றால் மரணம் கூட நெருங்காதுடா..
என் நிலவரம் உனக்கு புரியவில்லையா..
ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...
ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...ஓஓஓ..ஓஓ...