MARHABA AAVONA

 மர்ஹபா ஆவோனா




Movie: Saravanan iruka bayamen

Singers: Shreyaghoshal,  adhithya gadhvi

Music director: D.Imman 


மர்ஹபா ஆவோனா மனதிலே நீதானா..
நீயுமே நானா துள்ளினேனா புள்ளிமானா..
மர்ஹபா ஆவோனா மனதிலே நீதானா..
நீயுமே நானா துள்ளினேனா புள்ளிமானா..
வெண்ணிலா பிறையே வந்ததேன் தரையே 
ஏக இறைவனின் கொடை நீயோ..
எண்ணிலா திசையே எந்தன் ஏழிசையே 
மாட விளக்கதன் ஒளி நீயோ..
கண்ணில் கனா கனா கனா 
அதனால் கலைந்தேனே நான்..

மர்ஹபா ஆவோனா மனதிலே நீதானா..
நீயுமே நானா துள்ளினேனா புள்ளிமானா..

அன்னை மடியை தேடும் குழந்தை கண்டவுடன் தாவிடுதே..
அந்த கதை போல் ஆசை மனமும் உன்னழகை ஏந்திடுதே..
இந்த சுகம் சுகம் நிதமும் தொடர எண்ணங்கள் ஏங்கிடுதே..
கொஞ்சம் பொறு பொறு என நீ நகர்ந்தால் என்னுள்ளம் தேங்கிடுதே..
நினைவே சுடுதே மனமே கெடுதே..

மர்ஹபா ஆவோனா மனதிலே நீதானா..
நீயுமே நானா துள்ளினேனா புள்ளிமானா..

வெள்ளி சலங்கை ஓசை மறக்கும் வெட்கப்பட நீ சிரித்தால்..
இன்னும் நெடுநாள் வாழ பிடிக்கும் கண்கள் உனை பார்த்திருந்தால்..
மஞ்சள் நிலா நிலா மசக்கை அடையும் உன் சொல்லை கேட்டிருந்தால்..
அந்தி பகல் பகல் ரவிக்கை அணியும் உன் கையில் நான் இருந்தால்..
எனை நீ அடைந்தால் அதுவே பெருநாள்..

மர்ஹபா ஆவோனா மனதிலே நீதானா..
நீயுமே நானா துள்ளினேனா புள்ளிமானா..
மர்ஹபா ஆவோனா..