LALA KADAI SANTHI
லாலா கட சாந்தி
Movie: Saravanan iruka bayamen
Singers: Benny dayal, sunidhi chauhan
Music director: D.Imman
பெண்: வெதவெதமா இனிச்சிருக்கும் வெடல பொண்ணு நானு..
விருப்ப பட்டு நெருங்கி வந்தா வெளக்கு அணைக்கும்..
வாம்மானு நீ சொன்னா தருவேனே தேனு..
வட்டியோட அசல வாங்கு அதுதானே சீனு..
ஆண்: லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி..
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி..
பாத்தா பளபளக்குற பாலா வழிய வெக்குற கீத்தா கிழிய வெக்குற கிறுக்கேத்தி..
கேட்டா கதையளக்குற கேப்பா என்ன வெடிக்குற தீட்டா ஒதுங்கி நிக்குற உசுப்பேத்தி..
பெண்: லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி..
லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி..
ஏன்டா எலி புடிக்குற ஈயா இலை விரிக்குற தூண்டி துருவா நிக்குற சுதி ஏத்தி..
வாண்டா சுழல வெக்குற வாகா வழி மறிக்குற தாண்டி தவறு பண்ணுற அடி யாத்தி..
ஆண்: லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி..லாலா கட..
பெண்: லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி..
ஆண்: ஆச வெறகடுப்புல வேக விளைஞ்சி நிக்குற ரோசா உன்ன நெனைக்கையில் நெடி ஏறும்..
பெண்: பாசி பயிறு கண்ணுல பாதாம் பருப்பு செய்யுற ராசா உன்ன நெருங்கையில் ருசி மாறும்..
ஆண்: மத்தாக மனச நீ கடையாம என்ன மாராப்பில் பதம் பாரு..
பெண்: சத்தாக சகலமும் தர போறேன் மெத்த சாப்பாட்டில் பசியாறு..
ஆண்: உசுரே கேக்க உன்ன நான் தூக்க வாரேன் மாமன் கூத்தடிக்க..
பெண்: லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி..
ஆண்: லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி..
ஆண்: பாலும் கொதிச்சிருக்குது பாயும் விரிச்சிருக்குது ஆனா அது எதுக்குனு தெரியாதா..
பெண்: காயும் கனிஞ்சிருக்குது வாயும் நனஞ்சிருக்குது ஆனா அது உனக்குனு புரியாதா..
ஆண்: உன் கண்ணாடி வளவியும் உடையாம உன்ன கட்டோட மடிப்பேனே..
பெண்: என் கண்டாங்கி புடவையும் கசங்காம தொட மல்லாந்து கெடப்பேனே..
ஆண்: உடனே வாடி ஒழுங்கா தாடி மூடி போட எண்ணாதடி ..
பெண்: லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் ஏந்தி..
ஆண்: ஆஆ..ஆ..லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி..
........................
Songs lyrics from Saravanan iruka bayamen movie:
